Disqus Shortname

சாலவாக்கத்தில் சொர்ணபுரீஸ்வரர் திருக்கோவில் மஹா கும்பாபிஷேகம்

உத்திரமேரூர் ஜன, 26

உத்திரமேரூர் அடுத்த சாலவாக்கம் கிராமத்தில் சுமார் 2500 ஆண்டுகள் பழமை
வாய்ந்த பிரசித்தி பெற்ற கோவில் ஆனந்தவள்ளி சமேத ஸ்ரீ சொர்ணபுரீஸ்வரர்
திருகோவில். இக்கோவில் கடந்த சிலவருடங்களாக கோபுரம் கட்டும் பணி
நடைப்பெற்றுவந்தது. இப்பணி முடிந்த நிலையில் நேற்று காலை மஹா
கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை யொட்டி கடந்த மூன்று நாட்களாக
விக்னேஸ்வரபூஜை,
கணபதிஹோமம், கோபுபூஜை, வாஸ்துசாந்தி, பிரவேசபலி, யாகசாலைபூஜை,  போன்ற
பல்வேறு பூஜைகள் நடந்தது.  நேற்று புனித கலச நீரால் கோபுர கலசங்களுக்கு
ஊற்றப்பட்டு பின்பு கிராம மக்களுக்கு புனித நீர் தெலிக்கப்பட்டது.
இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக உத்திரமேரூர் எம்.எல்.ஏ வாலாஜாபாத்
பா.கணேசன், சேர்மென்கள் கமலக்கண்ணன், வரதராஜீலு ஒன்றிய குழு உறுப்பினர்
வனிதாமுருகன் மற்றும் ஏராளமான கிராம மக்கள் கலந்து கொண்டனர். இவ்விழாவினை
கிராமப்பொது மக்கள் மற்றும் விழாக்குழுவினர்கள் சிறப்பாக
செய்திருந்தனர்.சாலவாக்கம் சுற்றியுள்ள ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு
ஸ்வாமியை வழிபட்டனர். இவ்விழாவில் பக்தர்களுக்கு அறுசுவை உணவு
வழங்கப்பட்டது.

No comments