Disqus Shortname

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் பேராசிரியர்கள் இல்லாததால் மாணவ-மாணவியர்களின் கல்வி கேள்விக்குறி?

உத்திரமேரூர்  ஜன-09
உத்திரமேரூரில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி கடந்த 2013 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. இந்த கல்லூரி உத்திரமேரூர் அடுத்த திருப்புலிவனத்தில் கல்லூரி கட்ட முடிவு செய்து கட்டிடம் கட்ட இடம் தேர்வு செய்யப்பட்டது. கட்டிடம் கட்டும் வரையில் உத்திரமேரூர் அரசு ஆண்கள்
மேல்நிலைப் பள்ளிக்கு செந்தமான கட்டிடத்தில் தற்காலிகமாக கல்லூரி
செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டு கடந்த ஆண்டு செப்டம்பர் 13 ஆம்
தேதி கல்லூரி திறக்கப்பட்டது. இக்கல்லுாரியில் 2013 ஆண்டு
காஞ்சிபுரம், மதுராந்தகம், உத்திரமேரூர், மேல்மருவத்தூர் சுற்றியுள்ள
கிராமங்களில் இருந்து 244 மாணவ மாணவியர்கள் சேர்க்கப்பட்டு பயின்று
வருகின்றனர். தற்போது 2014 இரண்டாம் ஆண்டு துவக்கப்பட்டு சுமார் 240
மாணவ-மாணவியர்கள் சேர்ந்து பயின்று வருகின்றனர்.  இங்கு இளநிலைதமிழ், இளநிலைஆங்கிலம், இளநிலைவணிகம், இளநிலை கணிதம், இளநிலை கணினிஅறிவியல் ஆகிய 5 பாடப்பிரிவுகள் உள்ளன. இந்நிலையில் தற்காலிகமாக இயங்கிவரும் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு சொந்தமான புதிய கட்டிடம் தற்போது போதாத நிலையில் கல்லூரி நிர்வாகம் பள்ளி நிர்வாகத்திடம் கூடுதல் கட்டிடம் வழங்கக்கோரி அருகில் இருந்த கூடுதல் கட்டிடங்களை பெற்று இயங்கி வருகிறது. கல்லூரியில் மொத்தம் முதல் மற்றும் இரண்டாம் ஆண்டிற்கு சுமார் 28 பேராசிரியர்கள் இருக்க வேண்டும் ஆனால் இங்கு நிரந்தரப்பணியாளர்கள்
ஒருவரும், 7 தொகுப்பூதிய பேராசிரியர்கள் உட்பட 11 பேராசிரியர்கள் மட்டுமே
உள்ளனர். அலுவலகப்பணியாளர்கள் 17 பேர் இருக்க வேண்டும் ஆனால் 7 பேர்
மட்டும் உள்ளனர். மேலும் துப்புரவு பணிக்கு 5 பேரில் ஒருவர் கூட
நியமிக்கப்படவில்லை. அதிலும் கணினி, ஆங்கிலம் ஆகிய பாடப்பிரிவுகளுக்கு ஆசிரியர்களே இல்லை என்று மாணவர்கள் கூறுகின்றனர். (மேலும் 7 தொகுப்பூதிய பேராசிரியர்களுக்கும் கடந்த ஆறு மாதங்களாக ஊதியம் வழங்க வில்லை என்று கூறப்படுகிறது. இதனால் மாணவர்கள் பாடங்களை முழுமையாக கற்றுகொள்ளாத நிலை
உருவாகியுள்ளது. இதே நிலை நீடித்தால் மாணவ மாணவியர்களின் கல்வி
கேள்விக்குறியாகிவிடும். எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு தகுதிவாய்ந்த போராசிரியர்களை நியமித்து கல்லூரிக்கு கட்டிடம் கட்டும் பணியினை விரைந்து கட்டித்தர பெற்றோர்கள் மற்றும் மாணவ மாணவியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments