Disqus Shortname

போதிய மருத்துவர்கள் இல்லாத உத்திரமேரூர் அரசு மருத்துவமனை நோயாளிகள் அவதி

உத்திரமேரூர் ஜன, 19
உத்திரமேரூர் பஸ் நிலையம் அருகில் உத்திரமேரூர் அரசினர் பொது மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் உத்திரமேரூர் மற்றும் அதனை சுற்றியுள்ள 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். நாளொன்றுக்கு சுமார் 1500 நோயாளிகள் மருததுவமனைக்கு வந்து செல்கின்றனர். இந்த மருத்துவனையில் எக்ஸ்ரே, இ.சி.ஜி., அல்ரா ஸ்கேன், சித்தமருத்துவம், பல்மருத்துவம், இரத்தபரிசோதனை போன்ற வசதிகள் உள்ளது. 10 மருத்துவர்கள் இருக்க வேண்டிய மருத்துவமனையில் தற்போது 2 மருத்துவர் மட்டும் உள்ளனர். 6 செவிலியர் இருக்க வேண்டிய இடத்தில் 4பேர் மட்டுமே உள்ளனர். துப்புறவு பணியாளர் 4பேருக்கு ஒருவர் மட்டும் பணியாற்றி வருகின்றனர். மேலும் இரவு காவலாளி இதுவரையில் நியமிக்கப்படவில்லை. மேலும் இந்த மருத்துவமனைக்கு 32 படுக்கைகள் கொண்ட உள்நோயாளிகள் பிரிவு இருக்கிறது. ஆனால் புற நோயாளிகளுக்கு போதிய இட வசதி இல்லாமல் தினசரி நெருக்கடியில் நோய்கள் அவதி
படுகின்றனர். தற்போது நாளுக்கு நாள் நோய்கள் பெருகி வரும் சூழலில் ஏழை
எளிய மக்கள் பெரிதும் நம்பியுள்ள இந்த அரசு மருததுவமனையில் மருத்துவர்
மற்றும் இடவசதியின்றி பல்வேறு தரப்பினறும் பெரிதும் பாதிக்கபடுகின்றனர்.
மேலும் இரவு நேரங்களில் மருத்துவர் பற்றாக்குறையால் மருத்துவர் இருப்பது இல்லை. இதனால் இரவு நேரங்களில் அவசர சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் செங்கல்பட்டு அரசு மருத்துவமனை அனுப்பி வைக்க படுகின்றனர். இதனால் உயிர் சேதம் ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் அவசர தேவைக்கு இரவு நேரங்களில் 108 அழைத்தால் வாகனம் வருவதற்கு குறைந்தபட்சம் 1 மணி நேரமாவது ஆகிவிடுகிறது. இதனால் நோயாளிகள் மற்றும் விபத்துக்குள்ளானவர்களும் உயிருக்கே ஆபத்தான சூழல் நிலவுவதாகக் கூறுகின்றனர். இம்மருததுவமனையில் குழந்தைகள்
நலமருததுவர், மகப்பெருமருத்துவர் மயக்க மருத்துவர் போன்ற இடங்கள்
காலியாகவே உள்ளது. இதனால் குழந்தைகள் மற்றும் மகப்பெரு சிகிச்சைக்கு
வருபவர்கள் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவிடுவதாக
கூறப்படுகிறது. இந்த மருததுவமனைக்கு தேவையான இடங்களில் ஊழியர்கள் தங்குவதற்காக கட்டப்பட்ட பழைய கட்டிடங்கள் பயன்படுத்தாமல் உள்ளது. அதனை அப்புறப்படுத்தி அனைத்து வசதிகள் கொண்ட புதிய கட்டிடம் கட்டித்தரவும், மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் நியமிக்கவும் உத்திரமேரூர் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

No comments