Disqus Shortname

உத்திரமேரூர் அடுத்த சாலவாக்கத்தில் நடந்த மனுநீதிநாள் முகாமில் 119 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

உத்திரமேரூர் 23/01/2020
உத்திரமேரூர் அடுத்த சாலவாக்கம் கிராமத்தில் மனுநீதி நாள் முகாம்   நடந்தது முகாமில் உத்திரமேரூர் வட்டாட்சியர் கோட்டீஸ்வரன் தலைமை தாங்கினார். மாவட்ட
பிற்படுத்தப்பட்டோர் நல துறை அலுவலர் ரவிச்சந்திரன் மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை
அலுவலர் தனலட்சுமி, தனி வட்டாட்சியர் அகிலாதேவி மண்டல வட்டாட்சியர் ஞானவேல்  ஆகியோர் முன்னிலை வகித்தனர் நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சுந்தரமூர்த்தி  மற்றும் காஞ்சி மாவட்ட திமுக தெற்கு மாவட்ட  செயலாளர் க.சுந்தர் எம்.எல்.ஏ ஆகியோர் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினர்.  நிகழ்ச்சியில் இந்திராகாந்தி தேசிய முதியோர் உதவித்தொகை 31 நபர்களுக்கும்,
மாற்றுத்திறனாளி மற்றும் விதவை உதவித்தொகை தலா 1 நபருக்கும், கல்வி உதவி தொகை 2 நபர்கள், திருமண உதவித்தொகை 4 நபர்கள், இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கு
உதவித்தொகை 6 நபர்களுக்கும், தோட்டக்கலைத்துறை சார்பில் 3 நபர்களுக்கும், வேளாண்துறை சார்பில் 5 நபர்களுக்கும், தமிழ்நாடு பழங்குடியினர் நல வாரிய அடையாள அட்டை 20 பயனாளிகளுக்கும், இலவச வீட்டு மனை பட்டா 46 பேருக்கு என மொத்தம்  119 பயனாளிகளுக்கு ரூபாய் 23 லட்சத்து 2 ஆயிரத்து 175 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்  வழங்கப்பட்டது நிகழ்ச்சியில் சமூக பாதுகாப்புத்திட்ட துறை, தோட்டக்கலைத் துறை, வேளாண்துறை உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டு தங்களது துறை  ரீதியான அண்மை பணிகள் குறித்து விளக்கிக் கூறினர் மேலும் நிகழ்ச்சியில் ஆரம்ப சுகாதார
நிலைய மருத்துவர்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு மருத்துவ சிகிச்சை அளித்தனர் நிகழ்ச்சியில் சாலவாக்கம் ஒன்றிய செயலாளர் குமார், நிர்வாகிகள் வெங்கடேசன், சக்திவேல், முரளி மற்றும் வருவாய் துறை அலுவலர்கள் உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

No comments