Disqus Shortname

உத்திரமேரூர் அருகே பொங்கல் விழா கொண்டாட்டம்.

உத்திரமேரூர்
உத்திரமேரூர் அடுத்த மணித்தோட்டம் கிராமத்தில் உள்ள தனியார் பள்ளியில் தை பொங்கல் நாள் விழாவெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது விழாவை
முன்னிட்டு பள்ளி ணவியர்களுக்கிடையே கோலப் போட்டி உள்ளிட்ட பல்வேறு
போட்டிகள் நடந்தது. இதேப் போல் மாணவகளுக்கிடையே உரியடி, கபடி
உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் மற்றும் தமிழர்களின் பாரம்பரிய
விளையாட்டுகளான கல்லாங்கா, தாயம், ஆடுபுலியாட்டம், பல்லாங்குழி
உள்ளிட்ட விளையாட்டுகள் விளையாடப்பட்டது. போட்டியில் வெற்றி பெற்ற
மாணவ-மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. பின்னர் பள்ளி
வளாகத்தில் சூரியனுக்கு பொங்கல் வைத்து பொங்கல் விழாவை சிறப்பாக
கொண்டாடினர். பின்னர் பள்ளியில் மாணவ-மாணவியர்களின் கலைநிகழ்ச்சிகள் நடந்தது. இதனைத் தொடர்ந்து மாட்டு வண்டியில் ஊர்வலமாக வந்து பொங்கலே பொங்கல் என கோஷங்கள் எழுப்பியவாறு பொங்களை சிறப்பாக கொண்டாடினர். நிகழ்ச்சியில் பள்ளி மாணவ, மாணவியர்கள் ஆசிரியர்கள், பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டு பொங்கல் விழாவை வெகு விமரிசையாக கொண்டாடினர்.

No comments