Disqus Shortname

உத்திரமேரூர் சுந்தரவரதராஜ பெருமாள் கோவிலில் சொர்க வாசல் திறப்பு பெருமாள் கருட வாகனத்தில் வீதியுலா

உத்திரமேரூர் ஜன 06
உத்திரமேரூரில் பிரசித்திபெற்ற ஸ்ரீஆனந்தவல்லி நாயகி சமேத ஸ்ரீசுந்தரவரதராஜ பெருமாள் கோவிலில் நேற்று வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்கவாசல் திறப்பு நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடந்தது. நிகழ்ச்சியில் முன்னதாக இரவு முதல்
சுவாமிக்கு மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு அதிகாலை சுமார் 5 மணியளவில் ஸ்ரீசுந்தரவரதராஜ பெருமாள் நின்ற கோலத்தில்
சொர்கவாசல் திறக்க பெருமாள் பக்தர்களுக்கு காட்சியளித்தார். சொர்கவாசல் நிகழ்ச்சியில் பெருமாளை காண விடியற்காலை 3 மணி
முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமியினை தரிசித்தனர். பின்னர் உற்சவர் ஸ்ரீசுந்தரவரதராஜ பெருமாள்
அலங்கரிக்கப்பட்ட கருடவாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா வந்து
பக்தர்களுக்கு காட்சியளித்தார். சன்னதித் தெரு, பஜார் வீதி உள்ளிட்ட
மாட வீதிகள் வழியாக வீதியுலா வந்த பெருமாளுக்கு பக்தர்கள்
தீபாராதனை காண்பித்தும் தேங்காய் உடைத்தும் வழிபட்டனர்.
விழாவிற்கு உத்திரமேரூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த
பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இதேப் போல்
உத்திரமேரூர் அடுத்த திருமுக்கூடல் கிராமத்தில் உள்ள பிரசித்தி
பெற்ற ஸ்ரீஅப்பன் வெங்கடேசப் பெருமாள் கோவிலில் அதிகாலை 4
மணியளவில் சொர்க வாசல் திறக்கப்பட்டது. இதில்
ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.
காலை முதலே தொடர்ந்து மக்கள் கூட்டம் வந்த வண்ணம் இருந்தது.
மாலை உற்சவர் வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
நிகழ்வின் போது சாலவாக்கம் போலீசார் பாதுகாப்புப் பணியில்
ஈடுபட்டிருந்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விழாக் குழவினர்
சிறப்பாக செய்திருந்தனர்.

No comments