Disqus Shortname

ரூ.30 லட்சத்தில் கட்டப்பட்ட வட்டார சேவை மையம் வீண்

உத்திரமேரூர் 10/01/2020

உத்திரமேரூர்:ஊராட்சி கிராம சேவை மையங்களின் தலைமையிடமாக, 30 லட்சம் ரூபாய் செலவில், பெருங்கோழியில் கட்டப்பட்ட வட்டார சேவை மைய கட்டடம், பயன்பாட்டிற்கு வராமல் வீணாகிறது.உத்திரமேரூர் ஒன்றியம், அகரம்துாளி, ஆதவப்பாக்கம், இளநகர் உட்பட, 73 ஊராட்சிகள் உள்ளன.இங்கு வசிப்போர், பட்டா மாற்றம், வருமான வரி சான்று, இருப்பிட சான்று உள்ளிட்டவற்றை எளிதில் பெரும் வகையில், கிராம சேவை மையம் துவங்கப்பட்டது.இதன் தலைமையிடமாக, வட்டார சேவை மையம், உத்திரமேரூர் - செங்கல்பட்டு சாலையில், பெருங்கோழி ஊராட்சியில் உள்ளது.இந்த சேவை மையம், மஹாத்மா காந்திய தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட நிதி, 30 லட்சம் ரூபாய் செலவில், 2014 - 15ல் கட்டப்பட்டது. கழிப்பறை கட்டும் பணிகள் முழுமை பெறாமலேயே, 2017, ஆகஸ்ட், 7ம் தேதி திறக்கப்பட்டது.திறப்பு விழா மட்டும் நடந்த நிலையில், இரு ஆண்டுகளுக்கு மேலாகியும், பொதுமக்கள் பயன்பாட்டுக்கு இதுவரை திறக்கப்படவில்லை.கட்டடத்தின் பின்பக்க கதவு பூட்டப்படாமல் திறந்து கிடக்கிறது. இதன் வழியே செல்லும் சமூக விரோதிகள், சேவை மையத்தில் மது அருந்துகின்றனர்.எனவே, கழிப்பறை கட்டுமான பணியை விரைந்து முடித்து, வட்டார சேவை மையத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது

No comments