Disqus Shortname

குண்ணவாக்கம் கிராமத்தில் வருவாய் திட்ட முகாம்

உத்திரமேரூர் 02/01/2020
உத்திரமேரூர் அடுத்த குண்ணவாக்கம் கிராமத்தில் வருவாய் திட்ட முகாம்  நடந்தது. முகாமில் தனி வட்டாட்சியர் ஞானவேல் தலைமை தாங்கினார். வருவாய் ஆய்வாளர் கிரிஜா முன்னிலை வகித்தார். கிராம நிர்வாக அலுவலர்கள் ஹரி, பிரகாஷ் அனைவரையும் வரவேற்றனர். முகாமில் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், புதிய வாக்காளர் அட்டை, பட்டா மாற்றுதல், திருமண உதவி தொகை, முதியோர் உதவித் தொகை உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய 27 மனுக்கள் கிராம மக்களிடம் இருந்து பெறப்பட்டது. அதில் 8 மனுக்கள் உடனடி தீர்வு காணப்பட்டது. மீதமுள்ள 19 மனுக்கள் கணினி பதிவேற்றம் செய்யப்பட்டு பரிந்துரைக்கான அனுப்பப்பட்டுள்ளது. நிகழ்ச்சியின் போது குண்ணவாக்கம், பாண்டவாக்கம் பகுதியை சேர்ந்த கிராம மக்கள் தங்களது பல்வேறு கோரிக்கை மனுக்களை அளித்தனர். நிகழ்ச்சியில் அரசு அலுவலர்கள், பொது மக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments

கமெண்ட் செய்ய கணக்கு தேவையில்லை. கீழே "Comment as" என்பதில் Name/URL அல்லது Anonymous தேர்ந்தெடுத்து, கமெண்ட் எழுதி PUBLISH அழுத்தவும்.