Disqus Shortname

உத்திரமேரூர் ஒன்றியத்தில் 13,356 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து

உத்திரமேரூர் 19 ஜன,  2020
உத்திரமேரூர் ஒன்றியத்தில் ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனை, பஸ் நிலையங்கள், கோவில்கள், அங்கன்வாடி மையம் போன்ற மக்கள் அதிகம் கூடும் இடங்களில் மொத்தம் 127 மையங்கள் அமைத்து போலியோ சொட்டு மருந்து முகாம் நடைப்பெற்றது. இம்முகாம்களில் வட்டார மருத்துவ அலுவலர் உமாதேவி தலைமையிலான மருத்துவர்கள், செவிலியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், சத்துணவு பணியாளர்கள், பேரூராட்சி ஊராட்சி பணியாளர்கள், உட்பட ஏராளமானோர். கலந்து கொண்டு 5 வயதுக்குட்பட்ட 13,356 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் போலியோ சொட்டு மருந்தின் அவசியங்கள் குறித்து கிராமப்புறங்களில் ஒலிபெருக்கி மூலம் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு சொட்டு மருந்து வழங்கப்பட்டது. உத்திரமேரூர் அரசு மருத்துவமனையில் காஞ்சி மாவட்ட கூட்டுறவு சங்கத் தலைவர் வாலாஜாபாத் பா.கணேசன் துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் வட்டார மருத்துவ அலுவலர் பெறுப்பு வெங்கடேசன், அரசு பொது மருத்துவமனை மருத்துவர் மதன்குமார், உட்பட மருத்துவர்கள் செவிலியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments