Disqus Shortname

உத்திரமேரூரில் 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 300க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டம்

உத்திரமேரூர்
உத்திரமேரூரில் 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு
விவசாயிகள் சங்கம், மாற்றுதிறனாளிகள் நல சங்கம், அனைத்திந்திய மாதர்
சங்கம், வாலிபர் சங்கம், தனியார் நிறுவன தொழிற்சங்கங்கள், அங்கன்வாடி
மைய ஊழியர்கள் சங்கம் என அனைத்து சங்கங்கள் இணைந்து
போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் அனைவருக்கு ரேஷன்
பொருட்கள் கிடைத்திட வழிவகை செய்திடு, அத்தியாவசிய பொருட்களின்
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்திடு, வேலை வாய்பினை அதிகப்படுத்த
நடவடிக்கை எடு, தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச மாத ஊதியமாக ரூ. 21
ஆயிரம் நிர்ணயம் செய்திடு, தொழிலாளர்கள் அனைவருக்கும் ரூ. 4 ஆயிரம்
குறையாமல் ஓய்வூதியம் வழங்கிடு, போனஸ், பி.எப். வழங்குவதில் உச்ச
வரம்பை நீக்கிடு, பொதுத்துறை நிறுவனங்கள் தனியார்மயமாக்காதே, வங்கிகள்
இணைப்பை கைவிடு உட்பட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் மத்திய
மாநில அரசுகளை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பியவாறு உத்திரமேரூர்
பஜார் வீதி வழியாக ஊர்வலமாக வந்தனர். அப்போது உத்திரமேரூர்
செங்கல்பட்டு சாலையில் அரசு பொது மருத்துவமனை அருகே திடீரென
சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனே உத்திரமேரூர் போலீசார்
மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 300க்கும் மேற்பட்டோர் கைது செய்யது
தனியார் திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர். மறியல் காரணமாக
உத்திரமேரூர் செங்கல்பட்டு சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து
பாதிக்கப்பட்டது.

No comments