Disqus Shortname

உத்திரமேரூரில் அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான ஆலோசனைக் கூட்டம்

உத்திரமேரூர்
உத்திரமேரூரில் அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில் தலைமை நிர்வாக அலுவலர் ஏஞ்சலோ 
இருதயசாமி தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார். மாவட்ட கல்வி
அலுவலர் மகேஸ்வரி முன்னிலை வகித்தனர். வட்டார கல்வி அலுவலர்கள்
ஜெய்சங்கர், சேஷாத்திரி ஆகியோர் அனைவரையும் வரவேற்றனர். இதில்
அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் பாதுகாப்பு முக்கியத்துவம்,
தற்போதைய கற்றல் கற்பித்தல் முறைகள் அனைத்தும் மாணவர்களை
மையப்படுத்தி செயல்பாடுகள் செயதிட வேண்டும், அறிவியல் மற்றும் கணித
உபகரணப் பெட்டிகளில் பயன்பாடுகள் முழுவதுமாக பயன்படுவதை பள்ளி
தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்திட வேண்டும், போட்டித் தேர்வுகளில்
மாணவர்கள் வெற்றி பெற தக்க நடவடிக்கை மேற்கொண்டு வகுப்பறைகளில்
செயல்படுத்திட வேண்டும், உடற்பயிற்சி சார்ந்த செயல்பாடுகள் மாலை
வேளைகளில் ஆசிரியர்கள் கண்காணிப்பில் செயல்படுத்திட வேண்டும்,
வகுப்பறையில் பாடத்திட்டங்கள், பாடக் குறிப்புகள், போதனைக் கருவிகள்
பயன்பாடுகள், மாணவர்களின் பாடக் குறிப்பேடுகள், அவற்றின் மதிப்பீடுகள்
உள்ளிட்ட அனைத்தையும் தலைமை ஆசிரியர் கண்காணித்தல் வேண்டும்
மேலும் மாணவ-மாணவியர்களுக்கான அரசுத்திட்டங்களை செயல்படுத்துதல்,
மாணவர்களை ஊக்குவித்து வெற்றிப்பாதைக்கு வழிவகுத்தல்
உள்ளிட்டவைகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் வட்டார
வளமைய மேற்பார்வையாளர் ஜனனி மற்றும் அரசுப் பள்ளி தலைமை
ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments