Disqus Shortname

உத்திரமேரூர் அருகே அரசு பணிகளை மத்தியக் குழுவினர் திடீர் ஆய்வு

உத்திரமேரூர் 21/01/2020
உத்திரமேரூர் அடுத்த திருப்புலிவனம், திணையாம்பூண்டி, பெருநகர் ஆகிய கிராமங்களில் மத்திய அரசு சார்பில் கிராமங்களில் உள்ள நீர் நிலைகள் பாதுகாப்பிற்காக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் கிராமப்புற குளங்கள் தூர்வாரி, கரைகள் பலப்படுத்தப்பட்டு
கால்வாய்கள் சீரமைக்கும் பணியானது நடந்து வருகிறது. இப்பணியினை மத்திய  குழுவினர்  திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வில்  திருப்புலிவனத்தில் உள்ள செட்டிக்குளத்தினை ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் திணையாம்பூண்டி கிராமத்தில் கால்வாய் சீரமைக்குப் பணியினை பார்வையிட்டு பணிகள் குறித்து கேட்டறிந்தனர். இதனைத் தொடர்ந்து பெருநகர் கிராமத்தில் பால் சேகரிப்பு மையக் கட்டிடத்தினை பார்வையிட்டு பால் சுத்திகரிப்பு முறைகளை பார்வையிட்டனர். இந்த ஆய்வின் போது மத்திய ஆய்வுக்குழுவின் இயக்குனர் ராகவேந்திரா பிரதாப், சுருதி சிங், கிரண் படா, ரமாதேவி, மாவட்ட திட்ட இயக்குநர் ஸ்ரீதரன், வட்டார வளர்ச்சி  அலுவலர் தங்கராஜ், வருவாய் துறை அதிகாரிகள் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். ஆய்வின் போது திருப்புலிவனம், திணையாம்பூண்டி கிராம குளக்கரைகளில் மத்திய குழுவினர் மரக்கன்றுகள் நட்டு வைத்தனர். நிகழ்ச்சியில் பலர் கலந்து கொண்டனர்.

No comments