Disqus Shortname

சிறுப்பினாயூர் ஏரி மற்றும் கால்வாய்கள் சீரமைக்கப்படாததால் விவசாய நிலங்கள் பாதிப்பு

உத்திரமேரூர் அக்,29
உத்திரமேரூர் அடுத்த சிறுப்பினாயூர் கிராமத்தில் பொது பணித்துறைக்கு
செந்தமான 400ஏக்கர் பரப்பளவு கொண்டது சிறுப்பினாயூர் ஏரியாகும். இந்த ஏரி
முழுமையாகி வெளியேறும் உபரிநீர் சிறுப்பினாயூர், திருவந்தவார் ஆகிய
பகுதிகளில் உள்ள 1000திற்க்கும் மேற்பட்ட ஏக்கர் நெல், கரும்பு,
வேர்க்கடலை போன்றவைகள் விளையும் முக்கிய பயிராகும். இந்த ஏரி முழுவதும்
நீர் நிரம்பினால் முப்போகம் பயிரிடப்படும். இந்த ஏரியை கடந்த
20ஆண்டுகளுக்கு முன்பு துர்வாரப்பட்டது. தற்போது இந்த ஏரி, வரத்து
கால்வாய் மற்றும் பாசனகால்வாய் தூர்ந்து போயும் மரம், செடி, கொடிகள்
வளர்ந்தும் காணப்படுறது. ஏரிக்கு நீர் வரத்து குறைந்துள்ளது. அப்படி
நிரம்பினாலும் வெளியேறும் உபரிநீர் பாசன கால்வாய் தூர்ந்து போனதாலும்,
திருவந்தவார் அருகில் போடப்பட்ட தரைபாளத்தின் அளவு மிகவும் சிறியதாக
உள்ளதாலும், பாசன நீர்கால்வாய்க்கான கரைகள் சரிவர கட்டப்படாமல்
உள்ளதாலும் உபரிநீர் வெளியேறி அருகில் உள்ள கிராமபுறங்களில் தண்ணீர்
புகுந்து விணாவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். மேலும் இதனால் 1000
திற்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்கள் பயிரிடப்படாமல் விவசாயிகள்
பெரிதும் பாதிப்புள்ளாகின்றனர். இது குறித்து மாவட்ட நிர்வாகத்திடம்
விவசாயிகள் பல முறை புகார் அளித்தும் மாவட்ட நிர்வாகம் இது வரை எந்த வித
நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக
தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க பொது மக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

No comments