Disqus Shortname

கிராம மக்களுக்கு இடையூறாக இயங்கும் பழவேரி கல் குவாரியை மூட மக்கள் கோரிக்கை

உத்திரமேரூர்  அக்,01:
உத்திரமேரூர் அடுத்த பழவேரி கிராமத்தில் தனியார் கல் குவாரி 20 ஏக்கர் பரப்பளவில் கடந்த ஒரு ஆண்டாக செயல்பட்டு வருகிறது.
இதை சுற்றி அருங்குன்றம், பழவேரி,  திருமுக்கூடல், அரும்புலியூர், காவணிபாக்கம் உட்பட 10 க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். 80 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலம், கால் நடைகளுக்கான மேய்ச்சல் நிலம் ஆகியவையும் உள்ளன.
 பாறையை தகர்ப்பதற்காக வைக்கப்படும் வெடி பெரும் புகை மூட்டத்தையும், இரைச்சலையும் ஏற்படுத்துகிறது.
இதிலிருந்து சிதறும் கற்கள் விவசாய நிலங்களில் விழுகிறது, இதனால் விளைச்சல் குறைவதோடு, மண்ணின் தன்மையும் மாறுபடுகிறது.
காற்றில் பறந்துவரும் சிதறல்களாலும், இரைச்சலாலும்  குழந்தைகளுக்கும் முதியவர்களுக்கும் மூச்சுத்திணறல் மற்றும் இதய நோய்
படுகிறது.   இக் கல் குவாரியை மூடக் கோரி மாவட்ட கலெக்டரிடம் பல முறை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை.  எடுக்கவில்லை.
எனவே, கிராம மக்களையும், விவசாயத்தையும், கால்நடைகளையும் பாதுகாக்கும் வகையில் கல்குவாரிக்கு தடை விதிக்க மாவட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

No comments