Disqus Shortname

திமுக ஒன்றிய மற்றும் பேரூர் சார்பில் அண்ணா பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம்

உத்திரமேரூர் அக்,17
உத்திரமேரூர் ஒன்றிய மற்றும் பேரூர் திமுக சார்பில் 106வது அண்ணா பிறந்த
நாள் விழா பொதுக் கூட்டம் உத்திரமேரூர் பேரூந்து நிலையத்தில் நேற்று
நடைப்பெற்றது. விழாவில் உத்திரமேரூர் ஒன்றிய செயலாளர் இரா.நாகன் தலைமை தாங்கினார். மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் சோழனூர் மா.ஏழுமலை, பொதுக்குழு உறுப்பினர் ஞானசேகரன் முன்னிலை வகித்தனர். பேரூர் செயலாளர் என்.எஸ்.பாரிவள்ளல் அனைவரையும் வரவேற்றார். காஞ்சி மாவட்ட அவைத் தலைவர் க.சுந்தர், மாநில மாணவரணி செயலாளர் கடலூர் இள.புகழேந்தி ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். முடிவில் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் பெ.மணி நன்றி கூறினார்.

No comments

கமெண்ட் செய்ய கணக்கு தேவையில்லை. கீழே "Comment as" என்பதில் Name/URL அல்லது Anonymous தேர்ந்தெடுத்து, கமெண்ட் எழுதி PUBLISH அழுத்தவும்.