Disqus Shortname

மழைபெய்தும் நிரம்பாமல் உள்ள உத்திரமேரூர் ஏரி

உத்திரமேரூர் அக்,27

தமிழ்நாட்டில் மிகப்பெரிய ஏரிகளில் ஒன்றானது உத்திரமேரூர் ஏரி. இந்த
ஏரிக்கு வைரமேகன் தடாக ஏரி என்றழைக்கப்படுவர். இந்த ஏரி சுமார் 3000
ஏக்கர் பரப்பளவு கொண்டது, ஏரியில் இருந்து வரும் உபரிநீர் சுமார்
18-ற்க்கு மேற்ப்பட்ட கிராங்களில் உள்ள 5462 ஏக்கர் நிலங்களில் கரும்பு,
நெல், அதிகப்படியாக பயிரிடப்பட்டும். ஏரி முழுவதும் நீர் நிரம்பினால்
முப்போகம் பயிரிடப்படும் ஆனால் கடந்த 3 ஆண்டுகளாக பருவமழை
பொய்த்துப்போனதால் இந்த ஏரிகள் வற்றி விளையாடு மைதானமாக காட்சியளித்தது. விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியது. தற்போது கடந்த 7 நாட்களாக  மழை பெய்தும் உத்திரமேரூர் ஏரியில் வறண்டு காணப்படுகிறது. இன்றும் ஏரியை இளைஞர்கள் விளையாட்டு மைதானமாகத்தான் பயன்படுத்தி வருகின்றனர். ஏரியின் நீர் வரத்து கால்வாய்கள், வருவாய் கால்வாய்கள், சீரமைக்கப்படாமல்
தூர்ந்து போயும் மரம், செடி, கொடிகள் வளர்ந்து போயும் உள்ளதால் ஏரிக்கு
மழை நீர் வராமல் நிரம்ப முடியாத நிலை உள்ளது. ஏரியின் நீர்வரத்து
முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. ஏரியினை சார்ந்த 50க்கும் மேற்பட்ட
குளம், குட்டைகள் கூட வரண்டே காணப்படுகின்றது. ஏரிக்கு நீர்வராததால்
உத்திரமேரூர் மற்றும் சுற்றியுள்ள விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். கடந்த ஆண்டு ஏரியினை சீரமைக்க ரூ.1.94 கோடி தமிழக அரசு நிதி அளித்தது. ஆனால் பணிகள் சரிவர செய்யபடவில்லை. இதனால் கண்மாய், மதகுகள் உடையும் அபாயம் உள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர். எனவே பொதுப்பணித்துறை அதிகாரிகள் இந்த ஏரியினை பார்வையிட்டு கால்வாய்கள் அனைத்தையும் சிரமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments