Disqus Shortname

தனியார் இரும்பு தொழிற்சாலையால் அமராவதிபட்டினம் கிராம மக்கள் பாதிப்பு

உத்தரமேரூர் அக்,13

தனியார் இரும்பு தொழிற்சாலை
வெளியேற்றப்படும் கழிவுநீர்
 உத்தரமேரூர் அடுத்த அமராவதிபட்டினம் கிராமத்தில் தனியார் இரும்பு தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலை துவங்கி நான்கு வருடங்கள் ஆகிறது. கம்பெனியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். நாள்ஒன்றுக்கு 12 மணி நேரம் என இரண்டு கட்டமாக 24 மணி நேரமும் கம்பெனி இயங்கி வருகிறது. இந்த கம்பெனியில் பழைய இரும்புகளை வைத்து உருக்கி புதியதாக இரும்பு ராடு தயாரிக்கப்படுகிறது. கம்பெனியில் இருந்து பின்பிறமாக வெளியேற்றப்படும் கழிவுநீர் அருகில் உள்ள வயல்வெளிக்கு செல்லுவதால் நிலம் மாசுப்படுவதோடு பயிர்கள் வளர்ச்சியும் மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. மேலும் இந்த கழிவுநீர் நச்சுத்தன்மையுடையதாகவும் கால்நடைகள் இந்த கழிவுநீரை குடிக்கும் போது கால்நடைகள் பெரிதும் பாதிப்புக்குள்ளாவதாகவும் மனிதர்கள் மீது இந்த கழிவுநீர் படும் போது அறிப்பு ஏற்பட்டு ரனம் ஆகிவிடுவதாகவும், பலவகையான நோய்கள் வரும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்த கழிவுநீரால் கூற்றியுள்ள 100 ஏக்கர்க்கு மேற்ப்பட்ட விவசாய நிலங்கள் பாதிப்புக்குள்ளாகின்றன. என்றும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். மேலும் இந்த கம்பெனியில் இருந்து வெளியேறும் புகை கம்பெனியை சுற்றியுள்ள அமராவதிபட்டினம், ஆனம்பாக்கம், படூர், காட்டுக்கொல்லை, உப்பரபாளையம், நெற்குன்றம், சின்னாலம்பாடி போன்ற கிராமங்களில் உள்ள மக்களுக்கு மூச்சு திணறல் போன்ற பல்வேறு நோய்களுக்கு ஆளாகின்றனர். இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில் இந்த கம்பெனி தொடர்ந்து இயங்கிவந்தால் சுற்றியுள்ள விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் முற்றிலுமாக பாதிப்புக்குள்ளாவார்கள் எனவே இந்த கம்பெனி மீது தகுந்த நடவடிக்கை எடுக்கக் கோரியும் கிராம மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு கம்பெனியின் உரிமத்தை ரத்து செய்யவும் மாவட்ட நிர்வாக உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

No comments