Disqus Shortname

உத்திரமேரூரில் ஜம்மென்று ஒரு ஜிம்

 உத்திரமேரூர், அக். 04
இப்போதெல்லாம் யாரும் பணச்செலவைப் பார்ப்பதில்லை. தரத்தை மட்டுமே பார்க்கிறார்கள். உத்திரமேரூரில் எவ்வளவோ தரமான வசதிகள் உள்ளன.ஆனால் சர்வதேச தரத்திலான ஜிம் அதாவது உடற்பயிற்சி கூடம் இல்லாமல் இருந்தது.அந்தக் குறையும் இப்போது நீங்கிவிட்டது. புதிதாக உத்திரமேரூரில் உதயமாகியிருக்கிறது. '7ஸ்டார்  ஜிம் ' அதிநவீன வசதியும் நட்சத்திர ஓட்டலைப் போன்ற உயர் தகுதியும் கொண்டது. இந்த ஜிம்  திறப்புவிழா நேற்று (05-10-2014) நடந்தது.விழாவில் மிஸ்டர் இந்தியா பட்டம் வென்ற M.அரசு அவர்கள் உடற்பயிற்சி கூடத்தினை திறந்து வைத்து பேசினார்.திரு.கோபுடா எஸ்.கிருஷ்ணமூர்த்தி.,  (உலக தற்காப்புக் கலைகள்)மாமணி அவர்கள் வரவேற்றார்.அடிப்படை பணியாளர்கள் சங்க மாநில தலைவர் திரு T.தமிழ் செல்வன் அவர்கள்  வரவேற்று பேசினார்
. திரு. R.கவாஸ்கர்  ஜிம் மஸ்டார் தலைமை வகித்து பேசினார்.காஞ்சி மாவட்ட  ஆண் அழகன் செயலாளர் திரு.  கோல்டு D.பிரகாஷ்  முன்னிலை வகித்து பேசினார். திரு.B.சந்துரு காஞ்சி மாவட்ட  ஆண் அழகன் சங்க தலைவர்  , காஞ்சி மாவட்ட  ஆண் அழகன் சங்க பொருளாளர் திரு.K.லக்ஷ்மிபதி, Mr. காஞ்சி திரு.S.தினேஷ்  , திரு.S.முருகன் (Mr. காஞ்சி), அலுவலர்கள், மாணவ, மாணவிகள் மற்றும் விளையாட்டு ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.  ஜிம் நிர்வகி ஜெஸ்டின் பிரபாகரன் நன்றி கூறினார்.

No comments