Disqus Shortname

மதூர் கிராமத்தில் காய்ச்சல் - முகாமிட்டது மருத்துவ குழு

உத்தரமேரூர் அக்,07
உத்தரமேரூர் தாலுக்கா மதூர் கிராமத்தில் சுமார் 1250 பேர் மக்கள் வசித்து வருகின்றனர். கடந்த மாதம் 20–ம் தேதி மதூர் கிராமத்தை சேர்ந்த இருவருக்கு காய்ச்சல் என்று அருகில் உள்ள படூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்க்கு சென்று சிகிச்சைக்காக சென்று வந்தனர். இதை தொடர்ந்து இதே பகுதியை சேர்ந்த சிலர் வாலாஜாபாத் செங்கல்பட்டு ஆகிய பகுதிகளில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்று வந்ததாக கிடைத்த தகவலின் போரில் காஞ்சிபுரம் மாவட்ட சுகாதார அலுவலர்கள் மற்றும் வட்டார மருத்துவ அலுவலர்களும் இணைந்து மதூர் கிராமத்தில் 24-ம் தேதி முதல் முகாமிட்டனர். இது குறித்து மருத்துவ அலுவலர் கூறுகையில் மதூர் கிராம மக்களுக்கு வீடு வீடாக சென்று பரிசோதனை செய்து மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டதாகவும், இந்த காய்ச்சல் வைரஸ் காய்ச்சல் எனவும் 3 அல்லது நான்கு நாட்களில் சரியாகி விடும் எனவும் மருத்துவ அலுவலர் தெரிவித்தார். மேலும் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை பயன்படுத்த வேண்டும், வீட்டின் அருகே தண்ணீர் தேக்கத்தை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும் என பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். மதூர் கிராமத்தில் தற்போது வரை 35 பேர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

No comments