Disqus Shortname

சேதம் அடைந்த ரெட்டமங்கலம் சாலை: சீரமைக்க கோரிக்கை



உத்தரமேரூர் அக்,26
உத்தரமேரூர் அடுத்த ரெட்டமங்கலம், எலப்பாக்கம், சுண்டுப்பள்ளம்,
விண்ணமங்கலம், சேந்தாங்குளம், கைத்தண்டலம், ஒழையூர், மணமாங்கொல்லை, இடையம்புதூர், வரையிலான சாலை கடந்த 6 வருடங்களுக்கு முன்பு போடப்பட்டது. இந்த சாலை சுமார் 7கிமீ தொலைவு கொண்டது. இக்கிராமங்களில் சுமார் 6000த்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். உத்தரமேரூர், மதுராந்தகம், செங்கல்பட்டு செல்ல வேண்டும் என்றால் இந்த சாலை வழியாக தான் செல்ல வேண்டும்.  இந்த சாலை தற்போது மிகவும் குண்டும் குழியுமாகவும் மேடும் பள்ளமாகவும் கற்கல் பெயர்ந்து மிகவும் சிதலமடைந்து காணப்படுகின்றது. இந்த சாலையை கடக்கும் கிராம வாசிகள் நடந்து செல்வதற்கு முடியாமல் இரு சக்கர வாகனத்தில் சென்றால் பள்ளங்களிலும், கற்கல் மீதேரியும் கிழே விழுந்து காயமடைவதுடன் இருசக்கர வாகனம் அடிக்கடி பழுதாகிவிடுகிறது. ரெட்டமங்கலம் கிராமத்தில் அரசினர் உயர்நிலைப்பள்ளி உள்ளது.
இடைப்பட்ட கிராமத்தை சேர்ந்த 50திற்கும் மேற்ப்பட்ட மாணவ-மாணவியகள் இந்த சாலையை தான் பயன்படுத்துகின்றனர். இதனால் அடிக்கடி சைக்கிள் பழுதாகி உரிய நேரத்தற்கு பள்ளிக்கு செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகின்றனர். முதியவர்களும் நோயாளிகளும் இரவு நேரங்களில் இந்த சாலையை பயன்படுத்தினால் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். எனவே
இந்த சாலையை சீரமைத்து தர அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments