Disqus Shortname

காஞ்சிபுரத்தில் ஜெயலலிதாவிற்கு வழங்கிய தீர்ப்பை எதிர்த்து பஸ் எரிப்பு அதிமுக வினர் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம்

காஞ்சிபுரம் செப், 27


காஞ்சிபுரம், உத்திரமேரூர், செங்கல்பட்டு போன்ற பல்வேறு பகுதிகளில் அதிமுக பொது செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதாவிற்கு வழங்கப்பட்ட தீர்ப்பு எதிர்த்து அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். காஞ்சிபுரம் புதிய ரெயில்வே சாலையில் காஞ்சிபுரத்திலிருந்து பூந்தமல்லி சென்று கொண்டிருந்த அரசு பஸ்சை  திடீரென வழி மறித்தனர். பயணிகளை இறக்கி விட்டு பஸ்சுக்கு தீ வைத்தனர். உடனே பயணிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் காஞ்சிபுரம் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். உத்திரமேரூர் பஜார் வீதிகளில் கருணாநிதி உருவ பொம்மை எரித்து எதிர்ப்பை வெளிப்படுத்தினர். பஜார் வீதியில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. இதனால் பேருந்து நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது. செங்கல்பட்டு புதிய பேரூந்து நிலையத்தில் கருணாநிதி மற்றும் சுப்பிரமணியசுவாமி உருவ பொம்மை எரித்தனர். அனைத்து பகுதிகளில் பேருந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் பயணிகள், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாயினர். இதனால் பல்வேறு பகுதிகளில் பதற்றமான சூழ்நிலை நிலவிவருகிறது.

No comments