Disqus Shortname

நல்லதண்ணீர் குளம் நல்ல குளமாக மாறுவது எப்போது?

குளத்தை சுற்றி பன்றிக்கழிவு கோழிக்கழிவு போன்ற மாமிசக்கழிவுகளும் மனிதக்கழிவுகளும் இக்குளத்தை சுற்றி ஆக்கிரமித்துள்ளன.
உத்தரமேரூர் மே11



குளத்தில் செடி, கொடிகள் வளர்ந்து 
சேறும் சகதியுமாக மாறி உள்ளது.
உத்தரமேரூர் மற்றும் அதை சுற்றி பல்வேறு இடங்களில் தண்ணீர் தேவைக்காக பல வருடங்களுக்கு முன்பு ஏரிகள் குளங்கள் மற்றும் குட்டைகள் வெட்டப்பட்டு தண்ணீரை சேமித்து பயன்படுத்தி வந்தனர். இதில் உத்தரமேரூர் ஸ்ரீ சுந்தரவரதராஜர் பெருமாள் கோவில் பின்புறம் உள்ள நல்லத்தண்ணீர் குளம் 35 வருடங்களுக்கு முன்பு வரை உத்தரமேரூர் வாழ் பொது மக்கள் அனைவருக்கும் குடிநீராக பயன்படுத்தப்பட்டது. இந்த குளத்தை பாதுகாக்க தன்னார்வலர் ஒருவர் இந்த குளத்தில் கை, கால்கள் கழுவுவது போன்ற செயல்களை கூட செய்யவிடாமல் தடுத்து காவல் காத்து வந்தார். ஆனால் தற்போது இந்த குளத்தை சுற்றி பன்றிக்கழிவு கோழிக்கழிவு போன்ற மாமிசக்கழிவுகளும் மனிதக்கழிவுகளும் இக்குளத்தை சுற்றி ஆக்கிரமித்துள்ளன. இந்த குளத்தின் அருகில் கூட போக முடியாத அளவிற்கு துர்நாற்றம் விசுகிறது. இந்த குளத்தை சுற்றி செடி கொடிகள் புதர்போல் காட்சி அளிக்கிறது. இக்குளத்தை கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சுமார் 4 லட்சம் மதிப்பில் தூர்வாரி கம்பி வேலி அமைக்கப்பட்டும் பயனில்லை. சமூக விரோதிகள் ஆங்காங்கே கம்பிவேலியை துண்டித்து நீரை அசுத்தம்
செய்துவிடுகின்றனர். மேலும் இங்கு மாலை வேலைகளில் குடிமகன்களின் கூடாரமாகவும் உள்ளதாக பொது மக்கள் குற்றம் சாற்றுகின்றனர். இந்த குளத்தை முழுமையாக தூர்வாரி தண்ணீரை சுத்தம் செய்து தூய்மையான சாலைகள் அமைத்து புங்காவாக மாற்றி நல்லதண்ணீர் குளம் என்றும்
நல்ல தண்ணீராக பொது மக்கள் பயன்படுத்த சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
விடுத்தனர்

No comments