Disqus Shortname

ஓம்சக்தி ஸ்ரீ கீர்த்திமதி சித்திரைப் பெளர்ணமி பெருவிழா

உத்தரமேரூர் மே,14

உத்தரமேரூர் தாலுக்கா கருவேப்பம்பூண்டியில் ஓம்சக்தி ஸ்ரீ கீர்த்திமதி
அன்னை சக்தி பீடத்தில் புதன்கிழமையன்று சித்திரைப் பெளர்ணமி பெருவிழா
வெகு விமரிசையாக நடைபெற்றது. காலை 5 மணிக்கு உலக மக்கள் நன்மை வேண்டி சிறப்பு யாகமும், காலை 6.30 மணிக்கு ஓம்சக்தி மஹாபக்ரஹாகாளிதேவி சிம்மவாஹினி விஸ்வரூப தரிசன மண்டப அடிக்கல் நாட்டு விழாவும் நடைபெற்றது. ஓம்சக்தி மஹா பக்ரஹா காளிதேவி சிம்மவாஹினிக்கு 1008 பால்குட அபிஷேகம் நடைபெற்றது. அடிக்கல் நாட்டு விழாவில் கேரள மாநிலம், கீழாரூர் இராஜராஜேஸ்வரி திருக்கோயில் மடாதிபதி பிரம்மஸ்ரீ நித்தியானந்த சுவாமிகள், மீனாட்சி அம்மாள் அறக்கட்டளை நிறுவனர் டி.மீனாட்சிஅம்மாள், அறங்காவலர்
கோமதிராதாகிருஷ்ணன், உத்தரமேரூர் தொகுதி எம்.எல்.ஏ.வாலாஜாபாத் பா.கணேசன், காஞ்சி எம்.எல்.ஏ.வி.சோமசுந்தரம், அ.தி.மு.க கிழக்கு  ஒன்றிய கழக செயலாளர் கே.பிரகாஷ்பாபு, கருவேப்பம்பூண்டி ஊராட்சி மன்ற தலைவர் கெளரிமுனுசாமி ஆகியோர் கலந்துகொண்டனர்.  1008 பால்குட பாலபிஷேகத்தில் கும்பகோணம் சுவாமிமலை எஸ்.தேவசேனாபதி ஸ்தபதி மற்றும் சன்ஸ், டி.இராதாகிருஷ்ணன் ஸ்தபதி, திருவாரூர் ஆண்டிப்பந்தல் மரபு சிற்பக்கலைக்கூடம் சிற்பி எஸ்.திருநாவுக்கரசு, சென்னை பாரி மற்றும்
பெருந்தச்சன் பாலன் குமரேசன் ஆகியோர் கலந்து கொண்டனர். முன்னதாக
செவ்வாய்க்கிழமை இரவு 8 மணிக்கு இரத ஊர்வலம் நடைபெற்றது. இரதத்தில்
ஓம்சக்தி மஹாபக்ரஹாகாளிதேவி சிம்மவாஹினி அலங்கரிக்கப்பட்டு திருத்தேரில் வலம் வந்து பக்தர்களுக்கு  அருளாசி வழங்கினார். பெருந்திரளாக பக்தர்கள் கலந்து கொண்டு அன்னையின் அருளாசி பெற்றனர்.
விழாவில் ஓம்சக்தி பீடம் மங்கையின் மகிமை அறக்கட்டளை சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை விழாகுழுவினர் பி.வெங்கடேசன், ரா.மாதவன், ரா.அரிதாஸ் சிறப்பாக செய்திருந்தனர்.

No comments