Disqus Shortname

உத்தரமேரூரில் இருளர் பள்ளி செல்லா குழந்தைகளுக்கு கல்வி ஊக்குவிப்பு முகாம்

உத்தரமேரூர் மே 27
உத்தரமேரூரை அடுத்த மானம்பதியில் குழந்தைகள் கண்காணிப்பகம் சார்பில் பள்ளி இடைநிறுத்தமான இருளர் பழங்குடி குழந்தைகளுக்கு சிறப்பு கல்வி ஊக்குவிப்பு பயிற்சி முகாம் இரண்டு நாட்கள் மானாம்பதி சமுதாய கூடத்தில் நடைபெற்றது. இதில் மானாம்பதி, உள்ளம்பாக்கம், சந்தைமேடு, ஆகிய பகுதிகளில் இருந்து 57 குழந்தைகள் கலந்து கொண்டனர், இதில் 27 குழந்தைகள் பள்ளி இடைநிறுத்தமானவர்கள் ஆவர். இப்பயிற்சி முகாமை வழக்கறிஞர் எஸ்.ரவிக்குமார் துவக்கிவைத்தார். கல்வியின் அவசியம் குறித்தும், இடைநிறுத்தமின்றி பள்ளிக்கு செல்வதற்கான வழிமுறைகள் குறித்து குழந்தைகள் கண்காணிப்பகத்தின் இயக்குநர் து.ராஜ் மற்றும் சர்வோ அறக்கட்டளை நிர்வாகி எஸ்.கலைச்செல்வியும் பேசினார்கள். இம்முகாமில் விழிப்புணர்வு பாடல்கள். கதைகள், வண்ணம் தீட்டுதல், போன்றவற்றின் மூலம்  கல்வி விழிப்புணர்வு ஏற்ப்படுத்தப்பட்டது. இதில் மூங்கில் அம்மன் அறக்கட்டளை நிர்வாகி தே.வீராசாமி, எஸ்.ஸ்டெல்லா, எஸ்.லோகநாதன், ஆசிரியர் .மூர்த்தி, ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்துக் கொண்டு பயிற்சி அளித்தனர், பள்ளி செல்லா அனைத்து குழந்தைகளும் பள்ளி செல்ல உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். முடிவில் கலந்து கொண்ட அனைத்து குழந்தைகளுக்கும் நோட்டு புத்தகம் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது.

No comments