Disqus Shortname

ஆசிரியரே இல்லாத பாடத்தில் 100 சதவீதம் தேர்ச்சி

உத்திரமேரூர்மே,11:
சாலவாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில், வரலாறு பாடத்திற்கு ஆசிரியரே இல்லாத நிலையில், மாணவர்கள் அப்பாடத்தில், 100 சதவீதம் தேர்ச்சி பெற்று உள்ளனர்.

உத்திரமேரூர் ஒன்றியத்தில், சாலவாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில், பிளஸ் 2 தேர்வை, 91 மாணவர்கள், 85 மாணவியர் என, மொத்தம், 176 பேர் எழுதினர்.இதில், 88 மாணவர்கள், 82 மாணவியர் என, 169 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதம், கடந்த ஆண்டை விட, ஐந்து சதவீதம் உயர்ந்துள்ளது.ஆனால், இந்த பள்ளியில், வரலாறு பாடம் எடுப்பதற்கு, ஆசிரியர் இல்லாமல் பணியிடம் காலியாக உள்ளது.இதனால், 10ம் வகுப்பிற்கு வரலாற்றுப் பாடம் நடத்தும் ஆசிரியர் வெங்கடேசன், பிளஸ் 2 மாணவர்களுக்கும் வகுப்பெடுக்கும் நிலை இருந்தது.
இரு வகுப்பிற்கும் ஒரு ஆசிரியர் மட்டுமே பாடம் நடத்தியதால், மாணவர்களின் தேர்ச்சி நிலை கேள்விக்குறியாக இருந்தது. இந்த நிலையில், நேற்று முன்தினம் வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவில், வரலாற்று பாடப் பிரிவில் தேர்வு எழுதிய, 67 மாணவ, மாணவியரும் தேர்ச்சி பெற்றனர்.இதுகுறித்து, பள்ளி தலைமை ஆசிரியர் ராம்மோகன் கூறுகையில், ''கடந்த ஆண்டு, 91ஆக இருந்த தேர்ச்சி விகிதம், தற்போது, 96 ஆக உயர்ந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. காலை, மாலை நேரத்தில் சிறப்பு வகுப்புகள் மற்றும் ஆசிரியர், மாணவ, மாணவியரின் கடின உழைப்பே இந்த தேர்ச்சிக்குக் காரணம்,'' என்றார்.


நன்றி தினமலர்   

No comments