Disqus Shortname

உத்தரமேரூர் அரசு கல்லூரி: விறுவிறுப்பான விண்ணப்பங்கள் விநியோகம்

 காஞ்சிபுரம்20 May ,
உத்தரமேரூர் அரசு கலைக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.காஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூரில் அரசு கலைக் கல்லூரி தொடங்கப்படும் என்று கடந்த ஆண்டு முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.
இதற்காக உத்தரமேரூர் அருகே திருப்புலிவனத்தில் இடம் தேர்வு செய்யப்பட்டது. புதிய கட்டடம் கட்டும் வரை உத்தரமேரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வகுப்பு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி கடந்த கல்வியாண்டிலேயே கல்லூரி தொடங்கப்பட்டது. பி.ஏ. தமிழ், பி.ஏ. ஆங்கிலம், பி.எஸ்சி. கணிதம், பி.எஸ்சி. கணினி அறிவியல், பி.காம். ஆகிய பாடத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. முதலாம் ஆண்டில் 350 மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த மே 12-ஆம் தேதி முதல் 2014-2015-ஆம் ஆண்டுக்கான முதலாம் ஆண்டு மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் தொடங்கியது. விண்ணப்பத்தின் விலை ரூ. 27. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு விண்ணப்பம் ரூ. 2-க்கு வழங்கப்படுகிறது.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மே 26-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.உத்தரமேரூர், மேல்மருவத்தூர், மதுராந்தகம், வந்தவாசி, தாம்பரம், காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மாணவர்கள் அதிக அளவில் வந்து விண்ணப்பங்களைப் பெற்றுச் செல்கின்றனர்.
சனிக்கிழமை நிலவரப்படி பொதுப் பிரிவு மாணவர்கள் 378 பேரும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் 60 பேர் என மொத்தம் 438 பேர் விண்ணப்பங்களைப் பெற்றுள்ளனர். 350 இடங்களே உள்ள நிலையில் 700 விண்ணப்பங்கள் வரை விநியோகிக்கப்படும் என்று தெரிகிறது.

No comments