Disqus Shortname

உத்திரமேரூரில் 10 ம் வகுப்பு தேர்வில் 492 மதிப்பெண் பெற்று எஸ்.தாரணி முதலிடம்

    அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி 93 % தேர்ச்சி  

உத்தரமேரூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி 93 சதவீதம் தேர்ச்சி எஸ்.தாரணி 492இவர்தமிழ் 97, ஆங்கிலம் 98, கணக்கு 100, அறிவியல் 100, சமூக அறிவியல் 97 மதிப்பெண்கள் பெற்று அரசுப் பள்ளிகளில் தேர்வு எழுதி மாவட்ட அளவில்  2-ஆம் இடத்தைப் பெற்றார் பெற்றார்.   ப.திவ்யா 482, ஆர்.ஜெயலஷ்மி 482 இருவரும் மதிப்பெண்கள் பெற்று 2-ம்மிடம் பெற்றுள்ளதாக பள்ளி தலைமை ஆசிரியர் எம்.கே.தியாகராஜன் தெரிவித்தார்.

அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளி 66%  தேர்ச்சி 

உத்தரமேரூர் அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளி 66 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர் பி.சௌமியா 486 மதிப்பெண்கள் பெற்று முதலிடமும், ஜீ.தாரணி 476 மதிப்பெண்கள் பெற்று 2-ம் மிடம் பெற்றுள்ளதாக தலைமை ஆசிரியர் (பொறுப்பு) பாலமுருகன் தெரிவித்தார்.

மானாம்பதி அரசு மேல்நிலைப்பள்ளி 96 % தேர்ச்சி

 மானாம்பதி அரசு மேல்நிலைப்பள்ளி 96 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.  எ.தனலட்சுமி 478 மதிப்பெண்கள் பெற்று முதலிடமும், வி.சுமித்ரா 463 மதிப்பெண்கள் பெற்று 2-ம் மிடமும் பெற்றுள்ளதாக பள்ளி தலைமை ஆசிரியர் சண்முகம் தெரிவித்தார். 

 மீனாட்சி அம்மாள் மெட்ரிக்குலேஷன் மேனிலைப்பள்ளி 99%தேர்ச்சி

உத்தரமேரூர் மீனாட்சி அம்மாள் மெட்ரிக்குலேஷன் மேனிலைப்பள்ளி பத்தாம்வகுப்பு பொதுத்தேர்வு 99 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.  நீ.கீர்த்தனா 478, இ.சாலமன்வின்சன்ட்ராஜ் 478 பெற்று முதலிடம், ராமசாமி 476 மதிப்பெண் பெற்று 2-ம் மிடமும், வி.லலிதா 474 மதிப்பெண் பெற்று மூன்றாமிடம் பெற்றுள்ளனர்.  மேலும், இப்பள்ளி அறிவியல் 7 பேர் நூறு சதவீதம் தேர்ச்சியும் சமூக அறிவியல் 2 பேர் நூறு சதவீதம்  தேர்ச்சி பெற்றுள்ளதாக பள்ளி தலைமை ஆசிரியர் ஆர்.சேகர் தெரிவித்தார். 

பெருநகர் அரசு மேனிலைப்பள்ளியில் 82 சதவீதம் 

பெருநகர் அரசு மேனிலைப்பள்ளியில் 82 சதவீதம் தேர்ச்சி.  ஆர்.சங்கீதா 476 மதிப்பெண்கள் பெற்று முதலிடமும், ஜீ.காயத்திரி 474 மதிப்பெண்கள் பெற்று 2ம் மிடம் பெற்றுள்ளதாக தலைமை ஆசிரியர் ஆனந்தன் தெரிவித்தார்.   

மணித்தோட்டம் சர்வசேவா மெட்ரிக்குலேஷன் பள்ளி 100%தேர்ச்சி

 மணித்தோட்டம் சர்வசேவா மெட்ரிக்குலேஷன் பள்ளி நூறு சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.  வி.யுவராஜ் 464 மதிப்பெண்கள் பெற்று முதலிடமும், டி.வினித் 450 மதிப்பெண்கள் பெற்று 2ம் மிடம் பெற்றுள்ளதாக பள்ளி தலைமை ஆசிரியர் சந்தானம் தெரிவித்தார். 
  

No comments