Disqus Shortname

அத்தியூரில் மருத்துவ முகாம்

உத்தரமேரூர் மே, 17
உத்தரமேரூர் தாலுக்கா அத்தியூரில் அண்மையில் பல நோக்கு மருத்துவ சிகிச்சை முகாம் நடைபெற்றது. உத்தரமேரூர் சோழா அரிமா சங்கமும், காஞ்சி மீனாட்சி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையும் இணைந்து ஹெல்த் சென்டரில் நடைபெற்ற முகாமிற்கு அரிமா சங்கத் தலைவர் கே.சங்கரன் தலைமை தாங்கினார். அரிமா சாசனத்தலைவர் டாக்டர். சி.சுப்பிரமணியன் வரவேற்றார். அரிமா சங்கசெயலாளர் ஆர்.நீலகண்டன் முன்னிலை வகித்தார். மீனாட்சி மருத்துவமனை சிறப்பு மருத்துவர் வெங்கடேசன் மற்றும் 10 சிறப்பு மருத்துவர்கள் கலந்து கொண்டு 167 நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தனர். கண் அறுவை சிகிச்சைக்கு 5 பேர் தேர்வு  செய்யப்பட்டனர். பொருளாளர் வெங்கடேசன் நன்றி கூறினார். 

No comments

கமெண்ட் செய்ய கணக்கு தேவையில்லை. கீழே "Comment as" என்பதில் Name/URL அல்லது Anonymous தேர்ந்தெடுத்து, கமெண்ட் எழுதி PUBLISH அழுத்தவும்.