Disqus Shortname

உத்தரமேரூரில் பலத்த சூறாவளி காற்று

உத்தரமேரூர் மே,22

உத்தரமேரூர் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதியில் கடந்த சில நாட்களாக கடுமையான வெயில் வறுத்து எடுத்தது. இதனால் பொதுமக்கள் வியர்வையில் நனைந்தனர். எப்போது மழை பெய்யும் என்று எதிர்பார்த்து இருந்தனர்.
 
இந்த நிலையில் இன்று(மே,22) மாலை 5.30 மணியளவில் திடீர் என கருமேகங்கள் சூழ்ந்தது. சிறிது நேரத்தில் பலத்த சூறாவளிக் காற்று வீசியது. சுமார் 20 நிமிடம் வீசிய இந்த காற்றால் சாலைகளில் புழுதி கிளம்பியது.
 
வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர். காற்றின் கோரப்பிடிக்கு தாக்குபிடிக்க முடியாமல் சாலை ஓரம் இருந்த விளம்பர பலகைகள், பேனர்கள் தூக்கி வீசப்பட்டன.   உத்தரமேரூர் மற்றும் அதனை சுற்றி உள்ள பல்வேறு இடங்களில் பலத்த காற்றுக்கு மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்தன. இதனால் அந்த பகுதிகளில் மின் தடை ஏற்பட்டது. உத்தரமேரூர் பஸ்நிலையம் பகுதியில் சாலை யோரம் இருந்த கட்-அவுட்  விழுந்தது. இதனால் போக்குவரத்து பாதித்தது. உத்தரமேரூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சாலையில் பேனர்களை அகற்ற நடவடிக்கை எடுத்தனர்.  
நகரில் அனுமதியின்றி கட்-அவுட் வைக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் புகார் கூறியுள்ளனர்.  


மழை காலங்களில் பலத்த காற்று வீசும்போது கட்-அவுட் கீழே விழும் அபாயம் உள்ளது. சாலையில் செல்பவர்கள் மீது விழுந்தால் உயிர் இழப்பு ஏற்படும் என்றும் கூறுகின்றனர். எனவே கட்-அவுட் வைக்க போலீசார் தடை விதிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 
 
 
 
 

No comments