Disqus Shortname

பொது கழிப்பிடம் வசதி தேவை

உத்தரமேரூர் மே 11

உத்தரமேரூர் சன்னதி தெருவில் வட்டாட்சியர் அலுவலகம் வங்கிகள்
சார்பதிவாளர் அலுவலகம் பிரசித்திப்பெற்ற கோவில்கள் மற்றும்  உணவகம்,
கணினி மையம் என பல்வேறு வர்த்தக நிறுவனங்கள் உள்ளது. இங்கு உத்தரமேரூர் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமமக்கள் வங்கிகளுக்கு, சார்பதிவாளர் அலுவலகத்திற்கு வட்டாட்சியர் அலுவலகத்திற்கு, வியாபார நிமிர்த்தமாகவும் அல்லது கோவில்களுக்கும் நாள் ஒன்றுக்கு சுமார் 1000-திற்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். இங்கு அருகாமையில் பொது கழிப்பிடம் ஏதும் இல்லாததால் பொது மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். இதனால் கோவில்கள் அருகே அல்லது சாலையின் ஒரத்திலேயே அசுத்தம் செய்து விடுகின்றனர். கோவில்கள் அருகில் சாலையேரங்களில் அசுத்தம் அடைவதுடன் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கும், பாதசாரிகளும் முகத்தை சுளிர்க்க வைக்கிறது. இங்கு ஏதாவது ஒரு இடத்தில் பொது கழிப்பிடம் இருந்தால் பொது மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எனவே அப்பகுதியில் பொது கழிப்பிடம் அமைத்துதர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments

கமெண்ட் செய்ய கணக்கு தேவையில்லை. கீழே "Comment as" என்பதில் Name/URL அல்லது Anonymous தேர்ந்தெடுத்து, கமெண்ட் எழுதி PUBLISH அழுத்தவும்.