Disqus Shortname

ஆலஞ்சேரியில் அவ்வையார் கோவில் திருவிழா

உத்தரமேரூர் 20

உத்தரமேரூர் அடுத்த ஆலஞ்சேரி கிராமத்தில் மிகப்பழமை வாய்ந்த அவ்வையார் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று கூழ் வார்த்தல்  திருவிழா நடைப்பெற்றது. 16ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி ஆலஞ்சேரியில் உள்ள அனைத்து கோவில்ளிளும் சிறப்பு பூஜைகள் நடந்தது. திருவிழாவான நேற்று மாலையும், இரவும் வானவேடிக்கையோடு அலங்கரிக்கப்பட்ட இரதத்தில் அவ்வையார் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.  பக்தர்கள் அவ்வையாருக்கு கூழ்ஊற்றி வழிபட்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர். ஏராளமான கிராம மக்கள்
திருவிழாவில் கலந்து கொண்டனர்.

No comments

கமெண்ட் செய்ய கணக்கு தேவையில்லை. கீழே "Comment as" என்பதில் Name/URL அல்லது Anonymous தேர்ந்தெடுத்து, கமெண்ட் எழுதி PUBLISH அழுத்தவும்.