Disqus Shortname

கடல்மங்கலத்தில் 227 பயனாளிகளுக்கு பேன், மிக்ஸி, கிரைண்டர் எம்.எல்.ஏ. வாலாஜாபாத் பா.கணேசன் வழங்கினா


உத்தரமேரூர் பிப்-18  
உத்தரமேரூர் தாலுக்கா, கடல்மங்கலம் கிராமத்தில்227 பயனாளிகளுக்கு விலையில்லா பேன், மிக்ஸி, கிரைண்டர் உத்தரமேரூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வாலாஜாபாத் பா.கணேசன் வழங்கி சிறப்புரையாற்றினார். ஊராட்சி மன்றத்தலைவர் தே.வீராசாமி தலைமை தாங்கினார். ஒன்றிய குழுத்தலைவர் ஆர்.கமலக்கண்ணன், துணைத்தலைவர் அ.ரவிசங்கர் முன்னிலை வகித்தனர்.  உத்தரமேரூர் வட்டாட்சியர் கே.தேவராஜன் அனைவரையும் வரவேற்றார்.  தொகுதி செயலாளர் கே.ஆர்.தருமன், வாடாதவூர் ஊராட்சி மன்றத்தலைவர் எம்.ஐ.சதீஷ், தண்டரை தணிகை, திருவந்தவார் முருகன், ஓ.வி.வரதன், திருப்புலிவனம் ஒன்றிய குழு உறுப்பினர் எம்.கார்வண்ணன், சாலவாக்கம் ஊராட்சி மன்றத்தலைவர் முருகன், மாவட்ட குழு உறுப்பினர் சுமதி குணசீலன், மேனலூர் வேலாயுதம், குண்ணவாக்கம் ஆர்.கிருஷ்ணமூர்த்தி, ஒழையூர் ஆர்.நாராயணசாமி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

No comments

கமெண்ட் செய்ய கணக்கு தேவையில்லை. கீழே "Comment as" என்பதில் Name/URL அல்லது Anonymous தேர்ந்தெடுத்து, கமெண்ட் எழுதி PUBLISH அழுத்தவும்.