Disqus Shortname

ஸ்ரீ தேவி கள்ளகுறத்தி அம்மன் ஆலய பிரம்ம உற்சவ தேர்த்திருவிழா.


உத்தரமேரூர் பிப் ,01
உத்தரமேரூரை அடுத்த காக்க நல்லுார் கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ தேவி கள்ளக்குறத்தியம்மன் ஆலய பிரம்ம உற்சவ விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. 22ம் தேதி அன்று தொடங்கி 30 ம் தேதியன்று பிரம்மோற்சவம் தேர் திருவிழாவில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் அலங்கரித்து உற்சவ அம்மனை தேர்மீது ஏற்றி திரு வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். கிராம மக்கள் விரதமிருந்து நேர்த்திகடன்களை நிறைவேற்றினர். இவ்விழாவினை காக்கநல்லுார் கிராம நல சங்க தலைவர் லட்சுமணமூர்த்தி தலைமை தாங்கினார். உத்தரமேரூர் சட்ட மன்ற உறுப்பினர் வாலாஜாபாத் பா.கணேசன் ஒன்றிய செயலாளர்கள் கே.பிரகாஷ்பாபு, வி.ஆர்.அண்ணாமலை மற்றும் அரிமா சங்க மாவட்ட தலைவர் டி.கே.கோபாலகிருஷ்ணன் ஆகியோர்  தேர் வடமிழுத்து சிறப்பித்தனர். மேலதாளம் முழங்க நடைபெற்ற விழாவில் ஏராளமான பொது மக்கள் கலந்துக்கொண்டு அம்மன் அருள் பெற்றனர்.

No comments

கமெண்ட் செய்ய கணக்கு தேவையில்லை. கீழே "Comment as" என்பதில் Name/URL அல்லது Anonymous தேர்ந்தெடுத்து, கமெண்ட் எழுதி PUBLISH அழுத்தவும்.