Disqus Shortname

உத்தரமேரூர் ஒன்றியம் குண்ணவாக்கத்தில் 240 பயனாளிகளுக்கு பேன், மிக்ஸி, கிரைண்டர் எம்.எல்.ஏ. வாலாஜாபாத் பா.கணேசன் வழங்கினார்

உத்தரமேரூர் பிப்-13  
உத்தரமேரூர் தாலுக்கா குண்ணவாக்கம் கிராமத்தில் 240 பயனாளிக்கு விலையில்லா மிக்ஸி, பேன், கிரைண்டர்களை உத்தரமேரூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வாலாஜாபாத் பா.கணேசன் வழங்கி பாராட்டி பேசினார்.   இவ்விழாவில் ஊராட்சிமன்றத்தலைவர் இ.பெருமாள் தலைமை தாங்கினார். ஒன்றிய குழுத்தலைவர் ஆர்.கமலக்கண்ணன், துணைத்தலைவர் அ.ரவிசங்கர் முன்னிலை வகித்தனர். உத்தரமேரூர் வட்டாட்சியர் கே.தேவராஜன் வரவேற்றார். தொகுதி செயலாளர் கே.ஆர்.தருமன், ஒன்றிய கழக செயலாளர்கள் கே.பிரகாஷ்பாபு, வி.ஆர்.அண்ணாமலை, அத்தியூர்மேல்தூளி ஆர்.அரிகிருஷ்ணண், அம்மையப்பநல்லூர் பாசறை துணைச்செயலாளர் ஆர்.ஜெயபாலன், கே.ராஜகாந்தன் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள்  (கி.ஊ) உஷாராணி, மில்டன்ஜான்பிரபு (வ.ஊ), குண்ணவாக்கம் ஆர்.கிருஷ்ணமூர்த்தி, துணைத்தலைவர் டி.வெங்கடேசன், ஒன்றிய மாணவரணித்தலைவர் கே.ஜி.ராஜா, கிளைச்செயலாளர் கே.பி.கோபாலகிருஷ்ணன், ஊராட்சி கழக செயலாளர் சுபாஷ்ரெட்டி, சீத்தனஞ்சேரி சந்திரபோஸ், ஒன்றிய குழு உறுப்பினர் நந்தகுமார், மாவட்டகுழு உறுப்பினர் சுமதிகுணசீலன், மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற துணைத்தலைவர் டி.எம்.சடையாண்டி, ஒழையூர் ஆர்.நாராயணசாமி,   என்.எஸ்.மணி, ஒன்றிய மாணவரணி துணைச்செயலாளர் காட்டுப்பாக்கம் ஆர்.சரவணகுமார், ஒன்றிய பொருளாளர் வி.அண்ணாதுரை, புத்தளி ஊராட்சி மன்றத்தலைவர் எஸ்.குணசேகரன், ஓ.வி.வரதன், ஒன்றிய குழு உறுப்பினர் ஆனந்தன், ஒன்றிய கழக அவைத்தலைவர் சி.சுப்புரெட்டி, ஒன்றிய குழு உறுப்பினர் நந்தகுமார், மேனலூர் வேலாயுதம், ஆதவப்பாக்கம் கோதண்டன், புலியூர் ஊராட்சி தலைவர் பழனி  உட்பட பலர் கலந்துகொண்டனர். மாவட்ட பிரதிநிதி எம்.ஏ.வெங்கடேசன் நன்றி கூறினார்.

No comments