Disqus Shortname

உத்தரமேரூரில் முதல்வர் ஜெயலலிதா 65-வது பிறந்தநாள் விழா மாவட்ட மகளிரணி நலத்திட்ட உதவிகள்


உத்தரமேரூர் பிப்-23  
உத்தரமேரூர் ஸ்ரீ ஆனந்தவல்லி சமேத ஸ்ரீசுந்தரவரதராஜப்பெருமாள் கோவிலில் சனிக்கிழமையன்று தமிழக முதல்வர் ஜெயலலிதா 65-வது பிறந்தநாளை முன்னிட்டு அவர் நீடுழிவாழ காஞ்சி மேற்கு மாவட்டம் மகளிரணி சார்பில் அவரது பெயரில் அர்ச்சனை செய்தும், சர்க்கரை பொங்கல், புளிசாதம் மற்றும் மாற்றுத்திறனாளிகள் 25 சிறுவர் சிறுமிகளுக்கு சீருடையும் உத்தரமேரூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வாலாஜாபாத் பா.கணேசன் வழங்கினார். இவ்விழாவில் மாவட்ட மகளிரணி துணைச்செயலாளர் சத்யாநரசிம்மன் தலைமை தாங்கினார். சுந்தரவரதர் கோவில் தர்மகர்த்தா ஆர்.சேஷாத்ரி வரவேற்றார். உத்தரமேரூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் கே.பிரகாஷ்பாபு, மேற்கு ஒன்றிய கழக செயலாளர் வி.ஆர்.அண்ணாமலை, தொகுதி செயலாளர் கே.ஆர்.தருமன், ஒன்றிய குழுத்தலைவர் ஆர்.கமலக்கண்ணன், துணைத்தலைவர் அ.ரவிசங்கர், ஒன்றிய இளைஞரணி செயலாளர் எம்.கே.பி.வேலு உட்பட பலர் கலந்துகொண்டனர்.

No comments