Disqus Shortname

முதல்வர் பிறந்த நாளில் அ.தி.மு.க-வினர் நலஉதவி

உத்தரமேரூர்:
முதல்வர் பிறந்த நாளை முன்னிட்டு உத்தரமேரூர் பஸ் நிலையத்தில் பல்வேறு நலஉதவிகள் வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடந்தது.
நகர செயலாளர் கே.லட்சுமணன் தலைமை தாங்கினார். மேற்கு ஒன்றிய செயலாளர் வி.ஆர்.அண்ணாமலை, கிழக்கு ஒன்றிய செயலாளர் கே.பிரகாஷ்பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பேரூராட்சி துணைத் தலைவர் இ.தயாளன் வரவேற்றார். ஆதரவற்ற 100 பெண்கள் 100 ஆண்களுக்கு வேஷ்டி,சேலைகள் மற்றும் பயனாளிகளுக்கு இலவச தையல் இயந்திரம், சைக்கிள் உள்ளிட்டவற்றை எம்எல்ஏ-க்கள் வி.சோமசுந்தரம், வாலாஜாபாத் பா.கணேசன் ஆகியோர் வழங்கினர். 
ஒன்றியக்குழு தலைவர் ஆர்.கமலக்கண்ணன், துணைத் தலைவர் அ.ரவிச்சங்கர், ஒன்றிய முன்னாள் செயலாளர் கே.தயாளன், ஒன்றிய இளைஞரணி செயலாளர் எம்.கே.பி.வேலு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.   
உத்தரமேரூர் தாலுக்கா ஆலஞ்சேரி கிராமத்தில் உள்ள விநாயகர் கோவிலுக்கு முதல்வர் ஜெயலலிதா நீடூழி வாழ அபிஷேகம் செய்தனர். ஒன்றியக்குழு பெருந்தலைவர் ஆலஞ்சேரி ஆர்.கமலக்கண்ணன் தலைமை தாங்கி கிராம மக்களுக்கு இனிப்பு மற்றும் சிற்றுண்டி வழங்கினார். தோட்டநாவல் ஊராட்சி மன்றத் தலைவர் வரலட்சுமி கருணாநிதி முன்னிலை வகித்தார்.
உத்தரமேரூர் முத்துப்பிள்ளையார் கோவிலில் மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் எஸ்.சேகர் தலைமைதாங்கி பிரசாதம் வழங்கினார். இந்த விழாக்களில் காஞ்சி மேற்கு மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் டி.சந்திரமெüலி, முன்னாள் ஒன்றிய கழக செயலாளர் கே.தயாளன், உத்தரமேரூர் கிழக்கு மேற்கு ஒன்றிய கழக செயலாளர்கள் வி.ஆர்.அண்ணாமலை, கே.பிரகாஷ்பாபு, தொகுதி செயலாளர் கே.ஆர்.தருமன், பேரூராட்சி துணைத்தலைவர் இ.தயாளன் உள்பட பலர் பங்கேற்றனர்.
ஆதரவற்ற மாணவர்களுக்கு அறுசுவை உணவு
உத்தரமேரூர் தாலுக்கா, காரணை மண்டபம் கிராமம் சிவானந்தா குருகுலத்தில் தங்கி பயிலும் ஆதரவற்ற 180 மாணவ, மாணவியருக்கு இனிப்புடன் கூடிய அறுசுவை உணவை அதிமுக காஞ்சி மேற்கு மாவட்ட செயலாளரும், காஞ்சி எம்.எல்.ஏ.வுமான வி.சோமசுந்தரம், உத்தரமேரூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வாலாஜாபாத் பா.கணேசன் வழங்கினர்.
ஒன்றிய எம்.ஜி.ஆர். மன்ற செயலாளரும், களியாம்பூண்டி ஒன்றியக்குழு உறுப்பினருமான தங்க. பஞ்சாட்சரம் தலைமை தாங்கினார். ஒன்றியக் குழுத்தலைவர் ஆர்.கமலக்கண்ணன், துணைத்தலைவர் அ.ரவிசங்கர் முன்னிலை வகித்தனர். தொகுதி செயலாளர் கே.ஆர்.தருமன் வரவேற்றார். ஒன்றியக்கழக செயலாளர்கள் வி.ஆர்.அண்ணாமலை, கே.பிரகாஷ்பாபு, இளைஞர், இளம்பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் டி.சந்திரமெüலி, ஒன்றிய இளைஞரணி செயலாளர் எம்.கே.பி.வேலு உட்பட பலர் பங்கேற்றனர்.

வனத்துறை சார்பில் நடப்பட்ட  65 வகை மரக்கன்றுகள்

உத்தரமேரூர் ஊராட்சி ஒன்றியம் வனத்துறையினர் சார்பில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 65-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு ஞாயிற்றுகிழமை பல வகையான 65 மரக்கன்றுகள் நடப்பட்டன.
இந்நிகழ்ச்சிக்கு ஊராட்சித் தலைவர் அமுதா தலைமை வகித்தார். வனக்குழுத் தலைவர் பச்சையப்பன் முன்னிலை வகித்தார். உத்தரமேரூர் வனச்சரக அலுவலர் ஜி.சிவபெருமான் வரவேற்றார். விசூர் கிராமத்தில் அப்பாவு பண்ணை நிலம் ஏ.சக்கரபாணி தலைமையில் 65 வகை மரக்கன்றுகள் நடப்பட்டன. நடராஜன் உள்பட பலர் பங்கேற்றனர். சாலவாக்கம் பிரிவு வனவர் எம்.ராமதாஸ் தலைமையில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

No comments