Disqus Shortname

வீட்டு காஸ், கூடுதல் மின் கட்டணம் விதிகளை மீறும் திருமண மண்டபங்கள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

திருமண மண்டபங்களில் வீட்டு காஸ் பயன்படுத்தப்படுகிறாது. மின் கட்டணம் 3 மடங்கு கூடுதலாக வசூலிக்கப்படுகிறது. வாகனங்களை நிறுத்த இடம் இல்லை. விதிமுறைகளை மீறும் திருமண மண்டபங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என தமிழ் மக்கள் பண்பாட்டு கழகம் கோரிக்கை வைத்துள்ளது.
தமிழ்மக்கள் பண்பாட்டு கழகத்தின் மாநில அமைப்பாளர் கோ.ர.ரவி கலெக்டர் சித்ரசேனனிடம் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 789 திருமணமண்டபங்கள் உள்ளன, இதில் 500க்கும் மேற்பட்ட திருமண மண்டபங்களில் விதி முறை மீறி கூடுதல் கட்டணம் வசூலிக்கின்றனர். வாடிக்கையாளர்களிடம்  ஒரு யூனிட் மின்சாரத்துக்கு அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதலாக 3 மடங்கு வசூலிக்கின்றனர். சமையலுக்கு வர்த்தகத்துக்கு பயன்படுத்தும் காஸ் சிலிண்டர்களை பயன்படுத்தாமல் வீட்டு உபயோக சிலிண்டர்களையே பயன்படுத்துகின்றனர்.
இதனால் வாடிக்கையாளர்கள், காஸ் சிலிண்டர்கள் கிடைக்காமல் கடும் அவதிப்படுகின்றனர். பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை என்று விளம்பர பலகை வைத்துவிட்டு, பொது சுகாதாரத்துக்கு கேடு விளைவிக்கும் பிளாஸ்டிக் பொருட்களையே பயன்படுத்துகின்றனர்.
மேலும், திருமணமண்டபத்துக்கு வரும் வாடிக்கையாளர்கள், திருமண மண்டப வளாகத்தில் வாகன நிறுத்தும் இடம் இல்லாமல், திருமண மண்டபத்தை ஒட்டியுள்ள பிரதான சாலைகளில் வாகனங்கள் நிறுத்துகின்றனர்..
இதனால், பேருந்து வழித்தட சாலைகளில்  வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. குறிப்பாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தாம்பரம், திருப்போரூர், மாமல்லபுரம், மதுராந்தகம், கல்ப்பாக்கம், திருக்கழுக்குன்றம், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதூர் போன்ற பகுதிகளில் காலை, மாலை வேளைகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பயணிகள் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.
ஆகவே, விதிமுறை மீறம் திருமணமண்டபங்கள் மீது மாவட்ட நிர்வாகமும், அந்தந்த நகராட்சி, பேரூராட்சி நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும், வாகனம் நிறுத்த இடமில்லாத திருமணமண்டபங்கள் இயங்கதடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

No comments