Disqus Shortname

உத்தரமேரூர் அதிமுக கிழக்கு மேற்கு ஒன்றிய கழக ஆலோசனை கூட்டம்

உத்தரமேரூர் பிப்-14  
உத்தரமேரூர் அதிமுக கிழக்கு மேற்கு ஒன்றிய கழக ஆலோசனை கூட்டம் மணல்மேடு கிராமத்தில் பத்மாவதி திருமண மண்டபத்தில்  வியாழக்கிழமையன்று நடந்தது.  ஒன்றிய கழக அவைத்தலைவர் சி.சுப்புரெட்டியார் தலைமை தாங்கினார்.  மாவட்ட மன்ற இணைச்செயலாளர் கே.கங்காதரன் வரவேற்றார்.  ஒன்றிய குழுத்தலைவர் ஆர்.கமலக்கண்ணன், துணைத்தலைவர் அ.ரவிசங்கர் முன்னிலை வகித்தனர்.  பிப்ரவரி 24 –ம் தேதி தமிழக முதல்வர் ஜெயலலிதா 65-வது பிறந்தநாளை முன்னிட்டு கழக வீரர்கள், வீராங்கணைகள் செய்யவேண்டிய செயல்களைப் பற்றி மாவட்ட கழக செயலாளரும், காஞ்சி எம்.எல்.ஏ.வுமான வி.சோமசுந்தரம், உத்தரமேரூர் எம்.எல்.ஏ. வாலாஜாபாத் பா.கணேசன், ஒன்றிய கழக செயலாளர்கள் கே.பிரகாஷ்பாபு, வி.ஆர்.அண்ணாமலை, காஞ்சி பன்னீர்செல்வம், கே.தயாளன் உட்பட பலர் சிறப்புரையாற்றினார்கள்.  அவ்வமயம் தமிழக முதல்வர் ஜெயலலிதா 65-வது பிறந்தநாள் விழா அன்று இலவச மருத்துவ சிகிச்சை முகாம் ஒன்றியத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் அர்ச்சனை மற்றும் மாணவ மாணவிகளுக்கு உதவிகள் அன்னதானம், பிப்ரவரி 24-ம் தேதியன்று பிறக்கும் குழந்தைகளுக்கு அரை சவரண் தங்கநகைகள் வழங்கவும், கிளைகள்தோறும் கொடியேற்றி இனிப்புகள் வழங்கவேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இவ்விழாவில் குண்ணவாக்கம் ஆர்.கிருஷ்ணமூர்த்தி, ஒழையூர் ஆர்.நாராயணசாமி, திருவந்தவார் முருகன், மாவட்ட குழு உறுப்பினர் சுமதிகுணசீலன், களியாம்பூண்டி தங்க.பஞ்சாட்சரம், அம்மையப்பநல்லூர் எஸ்.கோவர்தன், குண்ணவாக்கம் ஊராட்சி மன்றத்தலைவர் பெருமாள், துணைத்தலைவர் டி.வெங்கடேசன், கிளைச்செயலாளர் கே.பி.கோபாலகிருஷ்ணன், தண்டரை தணிகைவேல், மேனலூர் வேலாயுதம், ஆதவப்பாக்கம் கோதண்டன், அத்தியூர் மேல்தூளி ஊராட்சி மன்றத்தலைவர் ஆர்.அரிகிருஷ்ணன், மானாம்பதி கண்டிகை லூசியாஜேம்ஸ், மகளிர்அணி அற்புதம் மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற துணைத்தலைவர் டி.எம்.சடையாண்டி, ஒன்றிய மாணவரணி செயலாளர் பி.கிருஷ்ணமூர்த்தி, புலியூர் ஊராட்சி மன்றத்தலைவர் பழனி, புத்தளி ஊராட்சி மன்றத்தலைவர் எஸ்.குணசேகரன், புலிவாய் ஊராட்சி மன்றத்தலைவர் ராஜசேகரன், திருப்புலிவனம் ஒன்றிய குழு உறுப்பினர் கார்வண்ணன், ஒன்றிய இளைஞரணி இணைச்செயலாளர் பி.ஜி.ரஞ்சித், உள்பட பலர் பங்கேற்றனர்.  ஒன்றிய குழு உறுப்பினர் ஆர்.ஏகாம்பரம் நன்றி கூறினார்.

No comments

கமெண்ட் செய்ய கணக்கு தேவையில்லை. கீழே "Comment as" என்பதில் Name/URL அல்லது Anonymous தேர்ந்தெடுத்து, கமெண்ட் எழுதி PUBLISH அழுத்தவும்.