Disqus Shortname

சமூக விரோதிகளின் கூடாரமாகும் சமுதாயக் கூடம்

உத்திரமேரூர் மே, 05

உத்திரமேரூர் அடுத்த அரும்புலியூர். குருமஞ்சேரி, பினாயூர்,
சீத்தனஞ்சேரி, சாத்தனஞ்சேரி, பழவேரி, கரும்பாக்கம், களியப்பேட்டை,
காவித்தண்டலம்  உள்ளிட்ட 20திற்கும் மேற்பட்ட கிராம மக்கள் தங்களது
திருமணம், நிச்சயதார்த்தம், போன்ற சுபநிகழ்ச்சிகளுக்கும், சுயஉதவி குழு
கூட்டங்கள், கிராம சபை கூட்டம் போன்ற பொது நிகழ்ச்சிகளுக்கு
செங்கல்பட்டு, உத்திரமேரூர், வாலாஜாபாத் அல்லது சாலவாக்கம் போன்ற
இடங்களுக்கு சென்று நிகழ்ச்சி நடத்த வேண்டியிருந்தது. இதனைத்தொடா்ந்து
அந்த பகுதிகளில் சமுதாயக் கூடம் அமைத்துதர கோரிக்கை விடுத்து வந்தனர்.
அதன்பெரில் அரும்புலியூர் கிராமத்தில் 2009-10 ல் பாராளுமன்ற உறுப்பினர்
தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து சுமார் 10 லட்சம் மதிப்பில் புதிய
கட்டிடம் கட்டி பொது மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து விடப்பட்டது. கிராம
மக்கள் பெரிதும் பயனடைந்து வந்தனர். ஆனால் தற்போது இந்த கட்டிடம் கடந்த 3
வருடங்களாக முறையான பராமரிக்கப்படாததால் முற்செடிகள் வளர்ந்து புதர்போல்
காட்சி அளிக்கிறது. இதனால் விஷ  ஜந்துக்கள் நடமாட்டம்  அதிகமாக உள்ளது.
மேலும் மாலை வேலைகளில் சமூக விரோதிகளின் கூடாரமாகவும் மாறிவருகிறது. எனவே
மாவட்ட நிர்வாகம்  இந்த கட்டிடத்தை முறையாக பராமரித்து சுற்றியுள்ள
செடிகளை அப்புறப்படுத்தி பொது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும்
என்று கிராம மக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்

No comments