Disqus Shortname

உத்திரமேரூரில் நெடுஞ்சாலை அலுவலகம் முன் தினக்கூலி ஊழியர் தற்கொலை முயற்சி

உத்திரமேரூர் ஏப்,30

உத்திரமேரூர் அடுத்த வேடபாளையம் பகுதியில் நெடுஞ்சாலைதுறை அலுவலகம்
செயல்பட்டு வருகிறது. உத்திரமேரூர் மற்றும் அதனை சுற்றியுள்ள சுமார் 420
கி.மீ சாலை பணிகள் இந்த அலுவலகக்கட்டுப்பாட்டில் உள்ளது. இங்குள்ள சாலை
பணியாளர்கள் சாலையோரம் உள்ள மரங்கள் மற்றும் கால்வாய்களையும் பராமறிப்பு
பணி செய்பவர்கள். இவர்களில் பெருமபாளோனோர் தினக்கூலி அடிப்படையில்
பணியாற்றி வருகின்றனர்.

இவர்கள் கடந்த 1984 முதல் 27 பேர் தினக்கூலி சாலைபணியாளர்களாக பணியாற்றி
வருகின்றனர். 2004-ல் பணிநிரந்தரம் செய்யக்கோரி உயர்நீதிமன்றத்தில்
மனுதாக்கல் செய்தனர் அதன் அடிப்படையில் 9/12/2005 உயர்நீதிமன்றம்
இவர்களுக்கு பணி நிரந்தர செய்ய ஆணை பிறப்பித்தது. இந்நிலையில்
நெடுஞ்சாலைதுறை மேல்முறையீடாக 2008-ல் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல்
செய்தது. அதற்கு உச்சநீதிமன்றம் 2010-ல் பணியாளர்களுகாக சாதகமாக தீர்ப்பு
வழங்கப்பட்டது. அதன் பின்னர் 2011-ல் 27 பேரில் 3 பேருக்கு மட்டும் பணி
நிரந்தரம் செய்ப்பட்டது. அதன் பின்னர் 7 பேர் பணி ஓய்வு பெற்றனர்.
தற்போது டிச,2014-ல் முறைகேடாக 3 நபர்களுக்கு மீண்டும் பணி நிரந்தர ஆணை
வழங்கப்பட்டது. மீதமுள்ள 14 பேருக்கு இது நாள் வரை பணி நிரந்தர ஆணை
வழங்கவில்லை. இந்நிலையில் நேற்று உத்திரமேரூர் அடுத்த வேடபாளையம்
பகுதியில் நெடுஞ்சாலைதுறை அலுவலகம் எதிரில் காவனூர்புதுச்சேரியை சேர்ந்த
தினக்கூலி சாலைப்பணியாளர் குமார் (45) தனது உடலில் மண்ணெண்னை ஊற்றி
தீக்குளிக்க முயற்சித்தார். உடனே அருகிலிருந்த ஊழியர்கள் அவரை தடுத்து
நிருத்தி அவரை சாமாதனப்படுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இது
குறித்து ஊழியர் கூறுகையில் – நாங்கள் 1984-ல் ரூ,7 துவங்கி தற்போது ரூ.
291 வரையில் சுமார் 30 வருடங்களாக தினக்கூலி அடிப்படையிலேயே பணியாற்றி
வருகிறோம். இது குறித்து உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் கூட எங்களுக்கு
பணி நிரந்தரம் செய்ய கூறியும் அரசு நிர்வாகம் எங்களது கோரிக்கைகளை செவி
சாய்காமலும், நீதிமன்ற தீர்பையும் அவமதிக்கும் வகையில் இதுநாள் வரை
எங்களை பணி நிரந்தரம் செய்யாமல் அலைக்கழிக்கின்றனர். மேலும் அரசாணை 26ன்
படி 3 ஆண்டுகள் பணியாற்றினால் அவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற
சட்டம் உள்ளது. ஆனால் அரசு நிர்வாகம் அதனை பொருட்படுத்தாமல் உள்ளனர்.
இதனால் எங்கள் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ளது. எனவே சம்மந்தப்பட்ட
அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து எங்களை பணி நிரந்தரம் வழங்குமாறு
கோரிக்கை விடுத்துள்ளனர்

No comments