Disqus Shortname

காஞ்சிபுரம் மாவட்ட அளவில் பிளஸ் 2 தேர்வில் உத்திரமேரூர் மாணவி முதல் இடம்

காஞ்சிபுரம் மாவட்ட அளவில் பிளஸ் 2 தேர்வில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகளை மாவட்ட ஆட்சியர் வி.கே. சண்முகம் பாராட்டிப் பரிசு வழங்கினார்.
தமிழகம் முழுவதும் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வியாழக்கிழமை வெளியானது. தேர்வு முடிவுகள் இணையதளத்திலும், பள்ளி தகவல் அறிக்கை பலகையிலும் ஒட்டப்பட்டன.
அதில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் முதல் 3 இடங்களை தாம்பரம், சேலையூர் சீயோன் மெட்ரிக்குலேஷன் பள்ளி மாணவிகள் பிடித்துள்ளனர். மாணவி எம். லாவண்யா 1,187 மதிப்பெண்கள் பெற்று முதலிடமும், மாணவி எஸ். சுஜிதா 1,186 மதிப்பெண்கள் பெற்று 2-ஆம் இடமும், மாணவி எஸ்.எஸ். லட்சுமி பாரதி 1,185 மதிப்பெண்கள் பெற்று 3-ஆம் இடமும் பிடித்துள்ளனர்.
உத்திரமேரூர் அரசு மேல்நிலை பள்ளி மாணவி காவியா 

அரசு பள்ளிகள்: அரசுப் பள்ளி அளவில் உத்தரமேரூர் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி எஸ்.பி. காவியா 1,167 மதிப்பெண்களும், செய்யூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி ஜே. கெüசல்யா 1,157 மதிப்பெண்களும், நந்திரவம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி வி. ரஞ்சிதா 1,156 மதிப்பெண்களும் பெற்று முதல் 3 இடங்களைப் பிடித்தனர்.
தனியார் பள்ளிகள்: அரசு உதவிபெறும் பள்ளிகள் அளவில் சென்னையை அடுத்த மடிப்பாக்கம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மேல்நிலைப் பள்ளி மாணவிகள் எஸ். மதுமிதா 1178 மதிப்பெண்களும், சி. அக்சயா 1,177 மதிப்பெண்களும், சந்தியா லட்சுமி 1,174 மதிப்பெண்களும் பெற்று முதல் 3 இடங்களைப் பிடித்துள்ளனர். பிறமொழி பாடங்களை முதன்மைப் பாடமாகப் படித்தவர்கள் பிரிவில் சென்னையை அடுத்த மடிப்பாக்கம், பிரின்ஸ் மெட்ரிக்குலேஷன் பள்ளி மாணவர் சி.ஆர். ராதேஷ் 1,192 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தைப் பிடித்தார். சென்னையை அடுத்த ஆதம்பாக்கம் எஸ்.டி.ஏ.வி. மேல்நிலைப்பள்ளி மாணவி மோனிகா, கிழக்கு தாம்பரம் சீத்தாதேவி கரோடியா இந்து வித்யாலயா மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி மாணவி கே. கீர்த்தனா ஆகியோர் 1,191 மதிப்பெண்களும் பெற்று இரண்டாம் இடத்தையும் பிடித்தனர்.
நங்கநல்லூர் பிரின்ஸ் மெட்ரிக்குலேஷன் பள்ளி மாணவி ஹர்சிதா ஜெயின், சென்னையை அடுத்த ஆதம்பாக்கம் எஸ்.டி.ஏ.வி. மேல்நிலைப்பள்ளி மாணவி எஸ். மதுமிதா ஆகியோர் 1,189 மதிப்பெண்கள் பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்தனர்.
மாவட்ட அளவில் சாதித்த இந்த மாணவர்களை, ஆட்சியர் வி.கே. சண்முகம் பாராட்டி பரிசும், சான்றிதழ்களும் வழங்கினார். நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாந்தி, ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்

No comments