Disqus Shortname

பிஎஸ்என்எல் இணையதள சேவை பாதிப்பு: உத்திரமேரூரில் மக்கள் அவதி

உத்திரமேரூர் மே.13 2015
: உத்திரமேரூர் மற்றும் அதை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் பிஎஸ்என்எல் இணையதள இணைப்பு மற்றும் லேண்ட்லைன் இணைப்பு ஆயிரக்கணக்கில் உள்ளது. அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள், வியாபாரிகள் மற்றும் மாணவர்கள், இளைஞர்கள், ெபாதுமக்கள் என பலரும் செல்போனில் இணைய தள சேவையை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த இணையதள சேவை திடீரென பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்டர்நெட் மையங்கள், அரசு, தனியார் அலுவலகங்கள் மற்றும் வியாபாரிகள், இளைஞர்கள் இந்த சேவையை பயன்படுத்த முடியாமல் பெரிதும் அவதிப்படுகின்றனர். கடந்த வாரம் பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியானபோது மதிப்பெண்களை பார்க்க முடியாமல் மாணவர்கள் கடும் அவதிப்பட்டனர்.

மேலும் அரசு அலுவலகங்களில் இ-சேவை மூலம்  சான்றிதழ்கள் பெற முடியாத நிலையும் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ளது. வங்கியில் பணபரிமாற்றத்தில் காலதாமதம் ஏற்படுகிறது. இந்த நிலை கடந்த 15 நாட்களாக நீடித்து வருகிறது.இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘உத்திரமேரூரில் பிராட்பாண்ட் சேவையை பிஎஸ்என்எல் மட்டுமே வழங்கி வருவதால் அதையே நம்பியுள்ளோம். பிஎஸ்எல்எல் லேண்ட்லைன் சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அரசு அலுவலகங்களை தொடர்புகொள்ள முடியாத நிலை உள்ளது. கடந்த 15 நாட்களாக இந்த ேசவை பாதிக்கப்பட்டுள்ளதால் அவதிக்குள்ளாகி வருகிறோம். எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

No comments