Disqus Shortname

சுழற்றி அடித்த சூறாவளி : இருளில் மூழ்கிய உத்திரமேரூர்

உத்திரமேரூர் மே,25,2015:-

உத்திரமேரூர்  மற்றும் அதை சுற்றியுள்ள   கம்மாளம்பூண்டி, திருப்புலிவனம், கட்டயாம்பந்தல், காரணிமண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று(மே,25)
மாலை திடீரென பலத்த சூறாவளி காற்று வீசியது. வானில் கருமேகம் சூழ்ந்து லேசான மழை பெய்தது.

 இதன் காரணமாக அழிசூர், சிலாம்பாக்கம், மேல்பாக்கம் ஆகிய கிராமங்களில் வீசிய பலத்த காற்றினால் மரங்கள் முறிந்து மின்கம்பங்களில் விழுந்தது.

இதனால் வயர்கள் துண்டாகி மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
 மரங்களை அப்புறப்படுத்தி மின் வினியோகத்தை சீரமைக்க அதிகாரிகள் போராடினர் .
உத்திரமேரூர்  மற்றும் அதன் சுற்றுப்புற பகுதியில்  பல  மணிநேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மின்சாரம் இல்லாமல் மக்கள் தவித்தனர்.

. திருப்புலிவனம் பகுதியில் பிப். 3ம் தேதி முத்துமாரியம்மன் கோயில் புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. நேற்று மாலை கோயில் நடை திறக்கப்பட்டு பூஜை நடந்து கொண்டிருந்தது. அப்போது வீசிய பலத்த காற்றினால் வில்வமரம் முறிந்து கோயில் மீது விழுந்தது. இதில் கோயில் இடிந்து விழுந்தது.நிர்வாகிகள் வீரராகவன், ஜெயபால் ஆகியோர் சிக்கி படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்து ஊர் பொதுமக்கள் விரைந்து வந்து இருவரையும் மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

No comments