Disqus Shortname

உத்திரமேரூா் மீனாட்சி அம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி

உத்திரமேரூா் மே.7
உத்திரமேரூா் மீனாட்சி அம்மாள் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளியில் கடந்த மார்ச் மாதம் 12 ஆம வகுப்பு தேர்வு நடைப்பெற்றது. இதற்கான தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது.  இதில் உத்திரமேரூர் மீனாட்சி அம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. இதில் ஏ.கோகுலகிருஷ்ணன் 1107 மதிப்பெண்கள் பெற்றும், எஸ்.தனலட்சுமி 1099 மதிப்பெண்கள் பெற்றும்,  கே.சூரியராஜ் 1086 மதிப்பெண்கள் பெற்றும் முதல் மூன்று இடங்களை பிடித்தனர். மேலும் கணிதப்பாடத்தில் இ.கார்த்திக்பிரபு, ஏ.கோகுலகிருஷ்ணன், ஆர்.பிரியங்கா ஆகியோர் 200ற்கு 200 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். பள்ளியின் தாளாளர் ஏ.என்.ராதாகிருஷ்ணன், கோமதிராதாகிருஷ்ணன், பள்ளி முதல்வர் ஆா்.சேகா், ஆசிரிய, ஆசிரியர்கள் அனைத்து மாணவ மாணவியியரையும் வெகுவாக பாராட்டி இனிப்புகள் வழங்கினர்.

No comments