Disqus Shortname

உத்தரமேரூரில் ஸ்ரீ.சுந்தரவரதர் தேரோட்டம்

உத்திரமேரூர் மே,3:
 
உத்திரமேரூர் சுந்தர வரதராஜ பெருமாள் கோயிலில் இன்று சித்திரை தேரோட்டம் கோலாகலமாக நடந்தது. உத்திரமேரூரில் ஆனந்தவல்லி  சமேத சுந்தர வரதராஜ பெருமாள் கோயில் உள்ளது. இங்கு சித்திரை மாத பிரம்மோற்சவ விழா கடந்த27ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலை, மாலை வேளைகளில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் சுந்தர வரதராஜர் பல்வேறு வாகனத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 3ம் தேதி  காலை நடந்தது. 

அதிகாலை 5.30 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவியுடன் சுந்தர வரதராஜர் தேரில் எழுந்தருளினார். ராயர் தெரு, மேட்டு தெரு, கருணீகர் தெரு, திருமலையார் பிள்ளை  தெரு உள்ளிட்ட தெருக்களில் தேர் வலம் வந்தது. பின்னர் பஸ் நிலையத்தில் உள்ள வைகுண்ட பெருமாள் கோயிலை வந்தடைந்த போது ஏராளமான பக்தர்கள்  சாமியை தரிசனம் செய்தனர். இதைத் தொடர்ந்து 
மீண்டும் கோயிலை தேர் சென்றடைந்தது. இதில்
ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு சாமி தரிசனம் செய்தனர்.  பக்தர்கள் தேரைவடம் பிடித்து இழுத்தனர்.    தேர் திருவிழாவின்போது பக்தர்களுக்கு சக்கரை பொங்கல், எலுமிச்சம் சாதம் தயிர்சாதம், மோர்அன்னதானம் வழங்கப்பட்டது.

No comments