Disqus Shortname

மது வாங்க அதிகாலையிலேயே குவிந்த மதுப்பிரியர்கள்

உத்திரமேரூர் 07/05/2020:
நீண்ட நாட்களுக்கு பின் அரசு மதுக்கடைகள் திறக்கப்படும் என அரசு அறிவித்திருந்தது அதன்படி காஞ்சிபுரம் மாவட்டம்  உத்திரமேரூரில் இரண்டு மதுபான கடைகள் திறக்கப்பட்டது. மதுபான கடைகள்   திறப்பதை அடுத்து மதுப் பிரியர்கள் மது வாங்குவதற்காக அதிகாலையிலிருந்தே கடைகளுக்கு முன்பு வரிசையில் காத்திருந்தனர்.
கரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு மார்ச் 25 முதல் நடைமுறைப் படுத்தப்பட்டது. இதையடுத்து அனைத்து வணிக நிறுவனங்கள், கடைகள், தொழிற்சாலைகள் மூடப்பட்டன. சுமார் 50 நாட்களாக ஊரடங்கு நடைமுறையில் இருந்த நிலையில் மே 7 வியாழக்கிழமை முதல் அரசு மதுக்கடைகள் திறக்கப்படுவதாக அரசு அறிவித்த்து. மேலும் மதுக் கடையில் மது விற்பனைக்கு கட்டுப்பாடுகளையும் அறிவித்தது. வயது வாரியாக குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட வயதினர் மட்டும் மது வாங்க அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து வியாழக்கிழமை காலை 8 மணி முதலே மதுக்கடைகள் முன்பு மது வாங்குவதற்காக மதுப்பிரியர்கள் திரண்டனர். அவர்களை வரிசையாக நிறுத்தி அவர்களது ஆதார் அட்டைகளை சரி பார்த்து டோக்கன் வழங்கப்பட்டு மது வழங்கப்பட்டது. மது வாங்க வருபவர்கள் கண்டிப்பாக முகக் கவசம் அணிந்து இருக்க வேண்டும் என்று கூறியதை அடுத்து முகக் கவசம் விற்பனையும் மும்முரமாக இருந்தது. உத்திரமேரூர் காவல்துறையினர் அனைத்து தரப்பினரையும் வரிசையில் நிறுத்தி ஒழுங்குபடுத்தினர்

No comments