Disqus Shortname

உத்திரமேரூர் அருகே தனியார் தொழிற்சாலையில் வடமாநில இளைஞர்களுக்கு கொரோனா பாதிப்பா ? அச்சமடைந்த கிராம மக்கள் தொழிற்சாலை முற்றுகை

உத்திரமேரூர் 01/05/2020
உத்திரமேரூர் அடுத்த மேல்பாக்கம் கிராமத்தில் தனியார் இரும்பு தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது இந்த தொழிற்சாலையில் மேல்பாக்கம் அனுமந்தண்டலம் களியாம்பூண்டி அருகே உள்ள கிராம இளைஞர்கள் உட்பட வட மாநில இளைஞர்கள் பலர் அங்கேயே தங்கி பணியாற்றி வருகின்றனர் இந்த தொழிற்சாலையில் ஊரடங்கு காரணமாக குறைந்த ஆட்களை கொண்டு இயக்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அங்கு பணியாற்றும் வடமாநில இளைஞர்கள் இருவருக்கு  திடீரென காய்ச்சல் ஏற்பட்டு அவசர ஊர்தி மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது இதை கண்ட மேல்பாக்கம், அனுமந்தண்டலம், களியாம்பூண்டி உள்ளிட்ட அக்கம் பக்க கிராமத்தினர் கொரோனா பாதிப்பு காரணமாக அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்களா? என்ற அச்சத்தில் காலை தொழிற்சாலையை முற்றுகையிட்டு கோஷங்கள் எழுப்பினர். தகவலறிந்த உத்திரமேரூர் காவல் ஆய்வாளர் விநாயகம் வட்டாட்சியர் கோடீஸ்வரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து  பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர் அப்போது பொதுமக்கள் தொழிற்சாலையில் வடமாநில இளைஞர்கள் உட்பட அனைத்து ஊழியர்களையும் பரிசோதனை செய்திட வேண்டும், தொழிற்சாலை முழுவதும் கிருமி நாசினி மருந்து தெளிக்க வேண்டும் தொழிற்சாலையினை முற்றிலும் இயக்க கூடாது என கோரிக்கை விடுத்தனர் கோரிக்கையின் பேரில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததன் பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர் இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது

No comments