Disqus Shortname

சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் மதுபான கடைகளுக்கு குடையுடன் வந்த ‘குடிமகன்கள்’

உத்திரமேரூர் 17/05/2020
தமிழகத்தில் ஊரடங்கு தளர்த்தப்பட்டு, மே 7ம் தேதி திறக்கப்பட்ட டாஸ்மாக் மதுக்கடைகள், மே 8ம் தேதி மாலையுடன் மூடப்பட்டன. சென்னை ஐகோர்ட் உத்தரவின் காரணமாக கடைகள் மூடப்பட்டன. இந்த உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை விதித்தது. இதையடுத்து தமிழகத்தில் நேற்று டாஸ்மாக் கடைகளை திறக்க தமிழக அரசு முடிவு செய்தது. அதன்படி உத்திரமேரூர் தலுகாவில் சாலவாக்கம் பெருநகர் கடையை தவிர உத்திரமேரூரில் உள்ள 2 டாஸ்மாக் கடைகள், ஒரு வாரத்திற்கு பிறகு நேற்று காலை 10 மணிக்கு திறக்கப்பட்டன
.அரசு அறிவிப்புகளான,குடையுடன் வர வேண்டும், முக கவசம்கட்டாயம் அணிய வேண்டும் போன்ற கட்டுப்பாடுகளை, குடிமகன்கள் நேற்று கண்டுகொள்ளவில்லை. எனவே இன்று
முக கவசம் அணிந்து ஆதார் அட்டை குடையுடன்
சென்றவர்களுக்கு மட்டுமே மது வழங்கப்பட்டது. மதுக்கடைகள் 43 நாட்களுக்கு பின்னர் திறக்கப்பட்டதால், குடிமகன்கள் குவிந்தனர். உத்திரமேரூரில் மதுக்கடைகளில் கூட்டத்தை ஒழுங்குப்படுத்த முடியாமல் போலீசார் தவித்தனர்.

அப்போது பல குடிமகன்கள் ஆதார் அட்டை, முக கவசம், குடையுடன் மது வாங்க வந்தனர். அவ்வாறு குடையுடன் வந்தவர்களுக்கு மதுபானம் வழங்கப்பட்டது. அதில் சிலர் புத்தம், புதிய குடை, குழந்தைகள் பயன்படுத்தும் குடையுடன் வந்தனர். அதுபற்றி அவர்களிடம் கேட்ட போது, காலையில் தான் புதிதாக குடையை வாங்கியதாக கூறினர். மது மீது உள்ள மோகத்தால் ரூ.100 மதிப்புள்ள குடையை ரூ.180-க்கு வாங்கி வந்ததாக வேதனையுடன் புலம்பினர்.

அதேநேரம் ஒரு சிலர் குடை இல்லாமல் மது வாங்க வந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது அவர்கள் குடை விற்பனை செய்யப்படும் கடைகளில் குடை விற்று தீர்ந்து விட்டன எனவே குடைகள் வாங்க முடியவில்லை என்று போலீசாரிடம் கெஞ்சினர். குடையில்லாமால் வந்தவர்களை போலிசார் திருப்பி அனுப்பி விட்டனர். மேலும் சமூக இடைவெளியை கடைபிடித்து மது வாங்கும்படி குடையுடன் வந்த நபர்களை போலீசார் கேட்டுக்கொண்டனர். இதையடுத்து சமூக இடைவெளியை கடைபிடித்து மதுவை வாங்கி சென்றனர். மேலும் இனிமேல் குடையுடன் தான் வரவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டனர். நேற்று மதுக்கடைகளில் கூட்டம் அலைமோதியது. ஆனால் இன்று வெகுவாக கூட்டம் குறைந்ததால் குடிமகன்கள் பல நாட்களுக்கு தேவையான மதுவை மொத்தமாக வாங்கி சென்றனர்.

No comments