Disqus Shortname

குடவோலை தேர்தல் குறித்த பழங்கால கல்வெட்டை பார்வையிட்ட மு.க.ஸ்டாலின்


காஞ்சிபுரத்தில் நமக்கு நாமே விடியல் மீட்பு பயணத்தை திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் நேற்று மாலை தொடங்கினார். நெசவாளர்கள், வணிகர்கள் சங்கத்தினருடன் அவர் கலந்துரையாடினார். தமிழகத்திற்கு ஆக்கப்பூர்வமான, வளர்ச்சி தரும் மாற்றத்தை கொடுத்திட திமுக தலைவர் கருணாநிதியின் ஆலோசனைப்படி கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் ‘நமக்கு நாமே விடியல் மீட்பு பயணம்’ மேற்கொண்டு பலதரப்பட்ட பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டு வருகிறார். கடந்த செப்டம்பர் மாதம் 20ம் தேதி, கன்னியாகுமரியில் சுற்றுப்பயணத்தை துவங்கிய மு.க.ஸ்டாலின், அக்டோபர் 2ம் தேதி திருச்சியில் தனது முதல் கட்ட பயணத்தை நிறைவு செய்தார். இதில் 12 மாவட்டங்களில் பயணம் செய்து மக்கள் குறைகளை கேட்டறிந்தார். இதன் தொடர்ச்சியாக 2ம் கட்ட விடியல் மீட்பு பயணத்தை 7ம் தேதி நீலகிரியில் துவக்கினார்.

கோவை, ஈரோடு, கரூர், நாமக்கல், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் என்று 12 மாவட்டங்களில் தொடர்ந்த பயணம் 18ம் தேதி கடலூரில் நிறைவு பெற்றது. இதையடுத்து 3ம் கட்ட விடியல் மீட்பு பயணத்தை மு.க.ஸ்டாலின் சேலத்தில் கடந்த 26ம் தேதி தொடங்கினார். 28ம் தேதி கள்ளக்குறிச்சியிலும், 29, 30 ஆகிய தேதியில் விழுப்புரம் மாவட்டத்திலும், 31ம் தேதி திருவண்ணாமலை மாவட்டத்திலும், 1ம் தேதி தர்மபுரியிலும், 2ம் தேதி கிருஷ்ணகிரியிலும், 3, 4 ஆகிய தேதிகளில் வேலூர் மாவட்டத்திலும் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இந்த 3 கட்ட பயணத்தின் போது 27 மாவட்டங்களில் 192 சட்டமன்ற தொகுதிகளில் மாணவ, மாணவிகள், விவசாயிகள், பெண்கள், தொழிலதிபர்கள் உள்பட பலதரப்பட்ட மக்களை நடந்து சென்றும், சைக்களில், பஸ்களில் சென்றும் நேரிடையாக சந்தித்தும் அவர்களது குறைகளை பரிவுடன் கேட்டறிந்தார். மேலும் அவர்கள் வைத்த கோரிக்கைகளை திமுக ஆட்சிக்கு வந்தபிறகு நிறைவேற்றப்படும் என்றும் உறுதியளித்தார்.

இதுவரை பொதுமக்களிடம் இருந்து 3.50 லட்சம் மனுக்களை அவர் பெற்றார். இதைத்தொடர்ந்து நேற்று அவர் காஞ்சிபுரம் மாவட்டத்தில் விடியல் மீட்பு பயணத்தை தொடங்கினார். நேற்றிரவு பட்டு நெசவாளர்கள் சங்கத்தினருடன் கலந்துரையாடல் நடத்தினார். அதன்பின்னர், காஞ்சிபுரம் மாவட்ட முக்கிய பிரமுகர்கள் மற்றும் வர்த்தகர் சங்கத்தினருடன் கலந்துரையாடினார். காஞ்சிபுரம் துளசி மகாலில் பட்டு நெசவாளர்கள் மற்றும் அவர்களின் சங்கத்தினருடன் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் நேற்று கலந்துரையாடினார். அதிமுக ஆட்சியில் தாங்கள் படும் துன்பத்தை அவர்கள் கூறினர். அறிஞர் அண்ணா பட்டு கூட்டுறவு சங்கத்தை சேர்ந்தவர்கள் பேசியதாவது: திமுக ஆட்சியில் இந்த சங்கம் தொடங்கப்பட்டது. பல்வேறு நல்ல திட்டங்கள் கொண்டுவரப்பட்டன. தொழிலாளர் பிரச்சனைகள் உடனுக்குடன் தீர்க்கப்பட்டன. தொழிலாளர்களுக்கு ஊக்க தொகை வழங்கப்பட்டது. நெசவாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி கடன் வழங்கப்பட்டது.

தற்போது, அதிமுக ஆட்சியில் சங்கத்தில் போலி உறுப்பினர்களை சேர்த்து சங்கத்தை நிலைகுலைய செய்துள்ளனர். நெசவு தொழிலில் போலி ஜரிகைகளை புகுத்தி தொழிலை நசுக்கி வருகின்றனர். இதனால், நெசவு தொழிலாளர்கள் தொடர்ந்து வாழ்க்கை நடத்த முடியாத அளவுக்கு தள்ளப்பட்டுள்ளனர். விலைவாசி விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ள நிலையில், தினமும் ரூ.100 சம்பாதிக்கவே மிகவும் கஷ்டப்பட வேண்டியுள்ளது. எனவே, இந்த ஆட்சி ஒழிய வேண்டும். நெசவாளர்கள் புத்துயிர் பெற மீண்டும் திமுக ஆட்சி வரவேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இதனை தொடர்ந்து ஆவடி வீதி விஜயா பட்டுசங்கத்தை சேர்ந்தவர்கள் கூறுகையில், “பட்டு நெசவு தொழில் இந்த ஆட்சியில் நிலைகுலைந்துள்ளது. நெசவாளர்கள் செக்யூரிட்டி வேலைக்கு செல்லவேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. தொழில் இல்லாமல் பெண்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர். மேலும், டாஸ்மாக்கால் பெண்கள் படாதபாடு பட்டு வருகின்றனர். எனவே, டாஸ்மாக்கை ஒழிக்க வேண்டும்” என்றனர்.

ஐயம்மாள்பேட்டை, முத்தையால்பேட்டை சாய பட்டறை உரிமையாளர்கள் பேசியதாவது: இந்த பகுதிகளில் 60 சாய பட்டறைகள் இயங்கி வந்தன. இந்த சாய பட்டறைகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் சுத்திகரிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டு வந்தது. அதிமுக ஆட்சிக்கு வந்த பின்னர் கழிவு நீரை சுத்திகரிக்க ரூ.20 கோடியில் ஆர்ஓ பிளான்ட் அமைக்க வேண்டும் என்று சொல்லி மின் இணைப்பை துண்டித்து வருகின்றனர். ஆர்ஓ பிளான்ட் அமைத்தால் அதில் கமிஷன் பெற முடியும் என்பதற்காக இது போன்ற நடவடிக்கைகளை அதிமுக அரசு செய்து வருகிறது. இவ்வளவு கோடியில் ஆர்ஓ பிளான்ட் அமைக்க முடியாமல் கடந்த ஒன்றேமுக்கால் வருஷமாக சாயப்பட்டறை உரிமையாளர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்த தொழிற்சாலையில் பணியாற்றும் ஊழியர்கள் வேறு தொழிற்சாலைக்கும் செல்லும் நிலை உள்ளது. மேலும், கஞ்சி தொட்டி திறக்கும் நிலைக்கு தொழிலாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர். எனவே, இந்த ஆட்சி ஒழிய வேண்டும்.

மீண்டும் திமுக ஆட்சி வந்தபின்னர் சாய கழிவுகளை சுத்திகரிப்பு செய்ய மின்சாரத்திற்கு மானியம் வழங்கி தொழில் முன்னேற்றமடைய வாய்ப்புகளை வழங்க வேண்டும். 200 முறைக்கு மேல் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளிடம் எங்களுடைய பிரச்னையை சொல்லியும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இவ்வாறு அவர்கள் பேசினர். பின்னர் மீண்டும் இன்று காலை 9 மணிக்கு காஞ்சிபுரத்தில் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணத்தைத் தொடங்கினார்.வியாபாரம் எப்படிநடக்குது? காஞ்சிபுரத்தில் இன்று காலை நடைபயணத்தை துவங்கிய மு.க.ஸ்டாலின், திடீரென அங்குள்ள ஓரிக்கை, அரசு நகர் பகுதியில் உள்ள டீக்கடைக்கு சென்றார். அங்கு டீ அருந்தினார். பின்னர் டீக்கடைக்காரரிடம் ‘வியாபாரம் எப்படி நடைபெறுகிறது’ என்று கேட்டறிந்தார்.

திடீரென மு.க.ஸ்டாலின் டீக்கடையில் அமர்ந்து டீ குடித்ததைப் பார்த்த அப்பகுதி மக்கள், ‘பெரிய தலைவராக இருந்துகொண்டு, சாதாரணமானவர் போல் டீக்கடையில் அமர்ந்து டீ குடிக்கிறாரே?’ என்று ஆச்சரியத்துடன் பார்த்தனர். இன்று காலை காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களுக்கு சென்று கிராம மக்கள் மற்றும் தாம்பரத்தில் வணிகர்களுடன் கலந்துரையாடுகிறார். பல்லாவரத்தில் தொல்லியல் துறையினரால் இடம் பெயர்ந்து செல்ல உத்தரவிடப்பட்டுள்ள மக்களுடன் பேசுகிறார். அதன்பின்  பெரும்புதூரில் வேலையிழந்த தொழிற்சாலை, தொழிலாளர்களுடன் கலந்துரையாடுகிறார்.


விஷம் போல் விலைவாசி

உத்திரமேரூர் செல்லும் வழியில் களக்காட்டூர் பகுதிக்கு இன்று காலை வந்த மு.க. ஸ்டாலினுக்கு சாலையின் இருபுறமும் திரண்டிருந்த பொதுமக்கள் மலர் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர். காலூரில் பொதுமக்களும், மாணவர்களும் வரவேற்பு அளித்தனர். அப்போது, அவர் பேசியதாவது: இன்று நாட்டை ஜெயலலிதாவும், சசிகலாவும் கொள்ளையடித்து கொண்டு இருக்கின்றனர். அண்மையில் கூட அவரது உடன்பிறவா சகோதரி சசிகலாவேளச்சேரியில் 11 தியேட்டர்கைள 1000 கோடி ரூபாய்க்கு மிரட்டி, அச்சுறுத்தி சொத்துக்களை வாங்கி குவித்துள்ளார். நாட்ைட ஜெயலலிதா குட்டிச்சுவராக்கி விட்டார். நாட்டை பற்றி அவர் கவலைப்படவில்லை. எங்கு பார்த்தாலும், கொலை, கொள்ளை, விலைவாசி விஷம் போல ஏறுகிறது. ரேஷன் கடைகளில் பொருட்கள் இல்லை. முதியோருக்கு உதவி தொகை தருவதில்லை. மக்கள் அவதிக்குள்ளாகி இருக்கும் நேரத்தில் கோடநாட்டில் ஓய்வெடுத்து கொண்டிருக்கிறார். அவருக்கு மக்கள் நிரந்தரமாக ஓய்வு தர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

No comments