Disqus Shortname

8 கோடியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் திறந்து வைத்தார்.

காஞ்சிபுரம் நவ 30.

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த திருப்புலிவனம் அருகே 8 கோடி மதிப்பில் புதியதாக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கட்டப்பட்டது. இந்த கட்டிடத்தை தமிழக முதல்வர் ஜெயலலிதா நேற்று கானொலி காட்சி மூலமாக திறந்து வைத்தார். பின்னர் கல்லூரியில் கணபதி பூஜை நடந்தது. காஞ்சி மேற்கு மாவட்ட கழக செயலாளரும் உத்திரமேரூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வாலாஜாபாத் பா.கணேசன் தலைமை தாங்கி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் முதல்வர் திறந்த பின் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினார். விழாவில் காஞ்சி எம்.எல்.ஏ. வி.சோமசுந்தரம் ஒன்றிய கழக செயலாளர்கள் கே.பிரகாஷ்பாபு, வி.ஆர்.அண்ணாமலை ஒன்றியக்குழுத் தலைவர் இரா.கமலக்கண்ணன், துனைத்தலைவர் அ.ரவிசங்கர், தண்டரைதணிகைவேல் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் திருப்புலிவனம்கார்வண்ணன், திருவந்தவார்முருகன், தங்கப்பஞ்சாட்சரம், ஊராட்சி மன்ற தலைவர்கள் சரளாபிரகாஷ்பாபு, வரலட்சுமிகருணாநிதி, வேலு, மாவட்ட இளைஞரணி இணை செயலாளர் சசிகுமார், என்.எம்.வரதராஜீலு, அக்ரிநாகராஜன் உட்பட பலர் பங்கேற்றனர்.

No comments